ETV Bharat / state

சாலை விபத்தில் பால் வியாபாரி உயிரிழப்பு: காவல்துறை விசாரணை

author img

By

Published : Feb 18, 2021, 3:30 PM IST

தென்காசி: கடையநல்லூர் அருகே கார் மோதிய விபத்தில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Milk trader killed in road accident: Police investigation
Milk trader killed in road accident: Police investigation

தென்காசி மாவ்ட்டம் கடையநல்லூர் அருகேவுள்ள மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி சுப்பையா(40). நேற்று இரவு (பிப்.17) இருசக்கர வாகனம் மூலம் கடையநல்லூர் அருகே மங்களாபுரம் செல்ல கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது தென்காசியில் இருந்து வேகமாக வந்த கார், சுப்பையாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் காவல்துறையினர், சுப்பையாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: செஞ்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட விடுதிக்கு சீல் வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.