ETV Bharat / state

தேக்கம்பட்டி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 'கோமதி' யானை!

author img

By

Published : Feb 7, 2021, 9:43 AM IST

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயிலுக்கு சொந்தமான கோமதி என்ற பெண் யானை நலவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

‘Gomati’ elephant taken to Thekkampatti camp
‘Gomati’ elephant taken to Thekkampatti camp

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயிலில், சுட்டித்தனம் மிகுந்த கோமதி என்ற பெண் யானை உள்ளது.

இந்நிலையில் கோமதி யானை மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதிக்கு யானைகள் நலவாழ்வு முகாமிற்காக நேற்று (பிப்.06) லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. முன்னதாக திருக்கோயிலுக்கு வந்த கோமதி யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பின்னர் லாரியில் ஏற்றி நலவாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் கூட்ட சத்து மாத்திரை வழங்க ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.