ETV Bharat / state

வங்கிக்கடனை கட்ட அவகாசம் கேட்டு தென்காசி மாற்றுத்திறனாளி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு!

author img

By

Published : Jul 12, 2021, 8:53 PM IST

முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

வாங்கிய கடனுக்கு அதிக வட்டி கேட்டு, வங்கி அலுவலர்கள் தொந்தரவு செய்வதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு வழங்கியுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று ஊரடங்ரகில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், ஜூன் 28ஆம் தேதி முதல், முதலமைச்சர் தனிப்பிரிவில் நேரில் மனுக்கள் பெறப்படுகின்றன.

முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை மனுக்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், தினந்தோறும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்கள் வழங்க அதிகம் பேர் வருகின்றனர். இதுவரை 65,000க்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே நம்பிக்கையில் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி கட்டச் சொல்லும், வங்கி அலுவரிடமிருந்து, கடனைக் கட்ட அவகாசம் பெற்றுத் தரும்படி மாற்றுத்திறனாளி ஒருவர் இன்று ( ஜூலை 12) முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், உடையார் தெருவைச் சேர்ந்தவர் மாசானம்; மாற்றுத்திறனாளி. தெனகாசியில் இருந்து சென்னை வந்த இவர் இன்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு ஒன்றை வழங்கினார்.

தென்காசி மாற்றுத்திறனாளி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

அம்மனுவில், தான் வங்கியில் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி கட்டச் சொல்லி வங்கி அலுவலர்கள் தொல்லை தருவதாகவும், தன் கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாசானம், " நான் தென்காசி மாவட்டம், உடையார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த, 2015ஆம் ஆண்டு, வியாபாரம் செய்யும் பொருட்டு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தென்காசியில் உள்ள இந்தியன் வங்கியில், ரூ.25 ஆயிரம் கடன் பெற்றிருந்தேன். அதில், 15 ஆயிரம் வரை திருப்பிச் செலுத்திய நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு வியாபாரம் செய்ய முடியாத நிலையில், என்னால் கடனைத் திருப்பி செலுத்த இயலவில்லை.

தற்போது இந்தியன் வங்கி, ரூ. 30 ஆயிரம் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என வங்கி அலுவலர்கள் தன்னை அலைப்பேசி வழியாக கேட்டு துன்புறுத்தி வருகின்றனர்.

தான் செலுத்த வேண்டிய தொகையை விட அதிக தொகை கேட்கும் வங்கி அலுவலர்கள் மீது பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தபால் மூலமாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் பதில் இல்லாததால், தற்போது நேரில் மனு கொடுக்க வந்துள்ளேன்.

வருமானத்திற்கு வழியின்றி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் ரேஷன் அரிசி உதவுயுடன் வாழ்கை நடத்தி வருகிறேன். தற்போதும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பணத்தில் தான் சென்னைக்கு வந்துள்ளாதாகவும், தனக்கு கடனைத் திருப்பி செலுத்த அவகாசம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'விடியலுக்காக' முதலமைச்சரை நோக்கி சைக்கிள் பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.