ETV Bharat / state

தென்காசியில் தொடர் மழை; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. 2 வது நாளாக அருவிகளில் குளிக்க தடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 5:51 PM IST

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. 2வது நாளாக அருவிகளில் குளிக்க தடை
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. 2வது நாளாக அருவிகளில் குளிக்க தடை

Tenkasi Rain: தென்காசியில் தொடர் மழை பெய்து வருவதால், 2வது நாளாக இன்று (ஜன.8) குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென்காசி: சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்குக் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்த நிலையில், தென்காசி மாவட்டத்திலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்தது. இதனை அடுத்து, தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று, (ஜன.8) மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், ஆய்க்குடி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில், சிவகிரி பகுதியில் தலா 7 மி.மீ மழையும், தென்காசியில் தலா 6.20 மி.மீ மழையும், செங்கோட்டையில் 4.60 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாகத் தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளமான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சங்கரன்கோவிலில் குடிநீர் மீட்டரைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்.! குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி.!

அருவியின் தடுப்புச் சுவரைத் தாண்டி, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று (ஜனவரி 7) தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் (ஜனவரி 8) அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கும் காரணத்தால் 2வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.