ETV Bharat / state

தென்காசியில் குற்றாலத்திற்கு இணையாக பொதுமக்கள் விரும்பிச் செல்லும் முந்தல் அருவி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:59 AM IST

தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு இணையாக பொதுமக்கள் விரும்பி செல்லும் முந்தல் அருவி
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு இணையாக பொதுமக்கள் விரும்பி செல்லும் முந்தல் அருவி

Mundhal waterfalls: தென்காசியில் உள்ள புன்னையாபுரம் கிராமத்தின் அருகில் உள்ள கற்பக நாச்சியார் அம்மன் கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து, முந்தல் அருவியில் உற்சாகத்துடன் குளித்துச் செல்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு இணையாக பொதுமக்கள் விரும்பி செல்லும் முந்தல் அருவி

தென்காசி: தென்காசி என்றாலே பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் இடம் குற்றாலம் ஆகும். குற்றால அருவியில் குளித்தால் வெப்பம், உடல் சூட்டை தணிக்கும். குற்றாலம் பிரதான அருவியில் நல்ல பருவ காலத்தில் இரவு, பகல் வித்தியாசமின்றி எப்போதும் மக்கள் குளிப்பதைக் காணலாம். ஆனால் சமீபகாலமாக கோடை விடுமுறை, சாமி தரிசனம் செய்து குளிக்க முந்தல் அருவி ஏற்றதாக உள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே புன்னையாபுரம் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த முந்தல் அருவி அமைந்துள்ளது. இது கிருஷ்ணாபுரம் காப்புக் காடு (reserve forest) பகுதிக்கு உட்பட்டது. மேலும், இங்கு வார விடுமுறையையொட்டி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர், கற்பக நாச்சியார் அம்மன் கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, முந்தல் அருவியில் உற்சாகத்துடன் குளித்துச் செல்கின்றனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், “இந்த கோயில் அருகே சுனை நீர் உள்ளது. இந்த புனித நீரில் நீராடி கற்பக நாச்சியார் அம்மனை வழிபட்டு வந்தால், நாம் நினைக்கின்ற காரியங்கள் கைகூடும். மேலும் அருகில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்து, ஊரில் கும்பாபிேஷகத்திற்கு தீர்த்தமாக இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்” என கூறினார்.

இதையும் படிங்க: தென்காசி பெண்ணின் மொபைல் எண்ணை தவறான செயலுக்கு பயன்படுத்திய கோவை இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.