ETV Bharat / state

கந்துவட்டி கேட்டு கூலித் தொழிலாளி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ!

author img

By

Published : Feb 28, 2023, 10:31 AM IST

Updated : Feb 28, 2023, 11:05 AM IST

கந்துவட்டி
கந்துவட்டி

ஆலங்குளம் அருகே கந்துவட்டி கேட்டு கூலித் தொழிலாளியை தாக்கிய கும்பலை போலீஸார் கைது செய்தனர். அந்த நபர் தாக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதிக கந்துவட்டி கேட்டு கூலித் தொழிலாளியை தாக்கிய கும்பல் கைது

தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவர் வாங்கிய 10 ஆயிரம் ரூபாய்க்கு வார வாரம் 300 ரூபாய் வீதம் வட்டி கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக வட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு வாரங்களாக வட்டி பணம் கொடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த நந்தகுமார், தனது உறவினர்களுடன் சேர்ந்து கூலித் தொழிலாளியை ரோட்டில் வைத்து தாக்கியதில், அவர் நிலை குலைந்தார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலார்குளத்தை சேர்ந்த நந்தகுமார், முஜித்குமார், ஆறுமுகம், மருதம்புத்தூரை சேர்ந்த பத்திரகாளி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அந்த தொழிலாளி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: நகைக்கடை கொள்ளை வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறுகிறதா போலீஸ்?

Last Updated :Feb 28, 2023, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.