ETV Bharat / state

மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய அண்ணாமலை

author img

By

Published : Aug 14, 2022, 7:20 AM IST

maruthu brothers statue  sivagangai maruthu brothers statue  respect to maruthu brothers statue  bjp state president annamalai  annamalai respect to maruthu brothers  tamil nadu bjp state president  sivagangai news  sivagangai latest news  மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை  மருது சகோதரர்கள் சிலை  சிவகங்கை மருது சகோதரர்கள் சிலை  மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய அண்ணாமலை  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர்  தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சிவகங்கையில் உள்ள மருது சகோதரர்கள் மணி மண்டபத்தில், அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை: 75ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதேபோன்று, சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்.

அதன் ஒரு நிழ்வாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பாஜக சார்பில் நேற்று (ஆக. 13) நடைபெற்ற நடை பயணத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, தேசிய கொடியை கையில் ஏந்தியபடி அண்ணா சிலை அருகிலிருந்து தாலுகா சாலை வழியாக, பேரணி நடத்தினார். பின்னர், தாலுகா அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள வீரமங்கை வேலூநாச்சியருக்கு உருதுணையாக இருந்து செயல்பட்ட வீரர்களான மருது சகோதரர்களின் மணிமண்டபத்திற்கு சென்றார்.

மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய அண்ணாமலை

அங்கிருந்த மருது சகோதரர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதத்தாய், மருது சகோதரர்கள், ஜாக்சன் துரை உள்ளிட்டோரை போன்று வேடமணிந்த சிறுவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுடன் அண்ணாமலை புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்பு, அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க: கொளத்தூரில் ரூ.12.30 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.