ETV Bharat / state

Burial Ground: குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் - பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Dec 31, 2021, 7:44 PM IST

Burial Ground: சிவகங்கையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்

Burial Ground: சிவகங்கை ஏ.ஆர். குவாட்ரஸ் அருகே அழகு மெய்ஞானபுரம், ரோஸ் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அங்குள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் அரசு புறம்போக்கு இடம் 58 சென்ட் உள்ளது.

அந்த இடத்தினை ஒரு பிரிவினருக்கு மயானத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் சாலை மறியல்

நேற்று (டிசம்பர் 30) அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அந்த மயானத்தில் புதைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்து மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: Emerald Lingam: தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத சிவலிங்கம் மீட்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.