ETV Bharat / state

இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் தனுஷ்கோடி வருகை!

author img

By

Published : Apr 20, 2022, 2:23 PM IST

Updated : Apr 20, 2022, 7:54 PM IST

இலங்கை
இலங்கை

இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களை மீட்டு மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அரசுக்கு எதிராக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 நபர்கள் ஏற்கனனே தமிழ்நாடு வந்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் அதி தீவிர ரோந்து காரணமாக அகதிகளின் வருகை தடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 20) தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் வந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் தனுஷ்கோடி வருகை

இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என மூன்று பேர் வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் மக்கள் இங்கு அகதிகளாக வருகின்றனர்.

இந்திய அரசு உதவ வேண்டும்: மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மூன்று பேரையும் மீட்ட மரைன் காவல்துறையினர் அவர்களுக்கு உணவு அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின் மண்டபம் இலங்கை முகாமில் தங்க வைக்கப்படவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டவர்கள் கூறுகையில், "இலங்கையில் குழந்தைகள், முதியவர்கள் வாழவே முடியாத ஒரு ஆபத்தான நெருக்கடி நிலை உருவாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமலும் குழந்தைகளுக்கு பால் கூட வாங்க முடியாமலும் அவதியுற்று வருகின்றனர்.

தமிழகத்திற்கு குறிப்பாக தனுஷ்கோடிக்கு வருவதற்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முயற்சித்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வர முடியவில்லை. இந்திய அரசு இலங்கை வாழ் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இலங்கை மலையகத்தில் பரவும் போராட்டத் தீ - அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

Last Updated :Apr 20, 2022, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.