ETV Bharat / state

"மக்களின் பிரச்சினை குறித்த மனுக்கள் வெற்று காகிதம் அல்ல.. அவர்களின் உணவுர்கள்" -நகர் மன்ற கூட்டத்தில் பெண் உறுப்பினர் விளாசல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 8:42 PM IST

மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நகர்மன்ற கூட்டம்
மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நகர்மன்ற கூட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் மக்கள் பிரச்சனை குறித்த மனுக்களை அரசு அலுவலர்கள் காகிதமாக பார்க்காமல், மக்களின் உணர்வுகளாக கருதி அவற்றிற்கு தீர்வு காண முயலுங்கள் என வேண்டுக்கோள் விடுத்தார்.

மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நகர்மன்ற கூட்டம்

சிவகங்கை: மாதாந்திர நகர்மன்ற கூட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் இன்று (நவ. 23) நடைபெற்றது. பெரும்பாலும் உறுப்பினர்களின் புகார்களுக்கு நகராட்சி அலுவலர்கள் எந்தவித பதிலும் நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம்சாட்டு எழுந்தவந்த நிலையில், இன்று கூட்டத்தில் இது குறித்து அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய பெண் உறுப்பினர் ஒருவர், "நகராட்சி அலுவலர்கள் மக்களின் குறைகளைக்கு உரிய தகவல்களை அளிப்பதில்லை. மக்களிடம் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் வெறும் காகிதமாக பார்க்கின்றனர். அது மக்களின் உணர்வுகள். அவர்களின் உணர்வுகளை மதித்து தீர்வுக் காண முயற்சிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், "மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பப்படுகின்றது. இது மட்டுமின்றி துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. தெரு விளக்குகள் எரிவதில்லை" என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, "இந்தப் பிரச்சனை நகராட்சி முழுவதும் இருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரு விளக்கு ஒப்பந்தத்தை மாநிலம் முழுவதும் ஒப்பந்ததாரர் எடுத்துள்ளதால், அவரிடம் இது குறித்து தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை" என வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மது விற்பனையை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு கிடையாது" - அமைச்சர் முத்துசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.