ETV Bharat / state

இருபது ஆண்டுகளுக்கு பின் பராமரிக்கப்பட்ட சாலை - எம்.பி.க்கு குவியும் வாழ்த்துகள்!

author img

By

Published : Jan 23, 2020, 3:44 PM IST

Twenty Years After Maintaining the RoadTwenty Years After Maintaining the Road
Twenty Years After Maintaining the Road

சேலம்: இருபது ஆண்டுகளாக எந்த வித பராமரிப்புமின்றி குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட சேலம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதனை சரி செய்திட நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றார்.

அதன்படி, சேலம் மாநகரம் 44ஆவது கோட்டம் களரம்பட்டி பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவர் ஆய்வு மேற்கொண்டபோது, களரம்பட்டி பிரதான சாலையானது கடந்த இருபது ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இந்த சாலையை புதுப்பிக்க சேலம் மாநகராட்சி அலுவலர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பல முறை எடுத்துரைத்தும், வலியுறுத்தியும், இந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில், இருபது ஆண்டுகளுக்கு பிறகு சாலை புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலை பணிகளை நேரில் பார்வையிட வந்த அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, தார்சாலை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் கூறியதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இருபது ஆண்டுகளுக்கு பின் பராமரிக்கப்பட்ட சாலை

இதுகுறித்து அவர் கூறுகையில், ’மாநகரம் முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பணியையும் போராடியே பெற வேண்டிய சூழல் நிலவிவருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: விண்வெளி குப்பைகளைச் சேகரிக்கும் தொழில்நுட்பம் - இஸ்ரோவுக்கு பள்ளி மாணவர்கள் புது ஐடியா

Intro:சேலம் மாநகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் சேலம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் இரு சக்கர வாகனத்தில் சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்...

கடந்த இருபது ஆண்டுகளாக பாராமரிப்பும் இன்றி குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்ட சேலம் பாரளுமன்ற உறுப்பினருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்..Body:
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதனை சரி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். அதன்படி, சேலம் மாநகரம் 44 வது கோட்டம் களரம்பட்டி பகுதியில் கடந்த இரு மாதத்திற்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட போது, களரம்பட்டி பிரதான சாலையானது கடந்த இருபது ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்து வருவதாகவும், இந்த சாலையை தினந்தோறும் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இது குறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரிடம், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதனையடுத்து இந்த சாலையை புதுப்பிக்க சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் சேலம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பல முறை எடுத்துரைத்தும், வலியுறுத்தியும், இந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில், இருபது ஆண்டுகளுக்கு பிறகு சாலை புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலைபணிகளை நேரில் பார்வையிட வந்த சேலம் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபனுக்கு அப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, தார்சாலை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை கூறியதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். காளிகவுண்டர் காடு, பாரதியார் நகர், ராஜாகவுண்டர் காடு, ராமர் தோட்டம் உள்ளிட்ட பகுதியில் கார் செல்ல முடியாததால், இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு அப்பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, மாநகரம் முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு பணியையும் போராடியே பெற வேண்டிய சூழல் நிலவி வருவதாகவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதே போன்று, கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக இருந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்ட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.