ETV Bharat / state

மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

author img

By

Published : Nov 20, 2019, 9:16 AM IST

சேலம்: மேட்டூர் அணை வெள்ள உபரி நீரை நீரேற்று மூலம் ஏரிகளில் நிரப்பும் திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ. ராமன் நேற்று ஆய்வு செய்தார்.

salem collector inspection the mettur dam water 100 lake scheme

சேலம் மாவட்டம் மேச்சேரி எம்.காளிப்பட்டியில் உள்ள ஏரியில் பொதுப் பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் மூலம் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ. ராமன் நேற்று ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை, சேலம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தினை அறிவித்து, அதற்காக 565 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் ஓமலூர் ஆகியப்பகுதிகளைச் சுற்றிலும் உள்ள விளைநிலங்கள் பயன்பெறும். முதற்கட்டமாக மேட்டூர் அணை வெள்ள உபரிநீரை மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரி மற்றும் நங்கவள்ளி ஏரி ஆகிய இரண்டு ஏரிகளில் நீர் நிரப்பி, மற்றப் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டம் திட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நிறைவேற்ற ஓராண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது. தற்போது திட்டத்திற்கான நில அளவீட்டுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 நாட்களுக்குள் இந்த அளவீட்டுப்பணிகள் நிறைவடையும். பின்னர் அடுத்த கட்டப்பணிகள் தொடங்கும்.

மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அற்புதமான இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், மக்கள் தாங்களாகவே முன்வந்து இத்திட்டம் விரைந்து நிறைவேற்றிட தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: பவானி ஆற்றில் குதித்த இளைஞரை தேடும் பணி தீவிரம்..!

Intro: முதலமைச்சர் அவர்கள் ரூ.565.00 கோடி மதிப்பீட்டில்
மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின்
சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர்
வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதனை
செயல்படுத்தும் விதமாக மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் ஆய்வுப் பணிகள் ப் பணிகள் ப் பணிகள்
நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் .சி.அ.ராமன்
அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Body:
சேலம் மாவட்டம், மேச்சேரி எம்.காளிப்பட்டியில் உள்ள ஏரியில் பொதுப் பணித்துறை,
நீர்வள ஆதாரத்துறையின் மூலம் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம்
மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர்
வழங்கும் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்
சி.அ.ராமன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன் கூறுகையில்,"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.565.00 கோடி மதிப்பீட்டில் மேட்டூர்
அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில்
உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தினை
அறிவித்துள்ளார்கள். இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட ஆய்வுப் பணிகளை
துரிதமாக மேற்கொண்டு பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை
போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம்
சேலம் மாவட்டம், எம்.காளிப்பட்டியில் உள்ள ஏரியில் ஆய்வு நடைபெற்று வருவதை நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை
சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர்
வழங்கும் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும்
ஓமலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறண்ட 100 ஏரிகளில் நீரேற்று மூலம்
நீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் குறித்து முதற்கட்ட ஆய்வு நடைபெற்று வருகின்றது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்போது அணையின்
இடது கரையின் நீர் பரப்பு பகுதியில் இருந்து வெள்ள உபரிநீரை மின் மோட்டார்கள் மூலம்
கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு
அந்நீரேற்று நிலையத்திலிருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு மழைக்கால உபரிநீர் கொண்டு
செல்லப்பட்டு, இந்த எம்.காளிப்பட்டி ஏரியிலிருந்து 67 ஏரிகளுக்கும் மற்றும் நங்கவல்லி ஏரிக்கு
இதேபோல் மழைக்கால உபரிநீர் கொண்டு செல்லப்பட்டு நங்கவல்லி ஏரியிலிருந்து 33
ஏரிகளுக்கும் என மொத்தம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான பணிகளை
மேற்கொள்வதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை 120 அடியினை எட்டிய பிறகு மழைக்கால உபரி நீர்
திறந்துவிடப்பட்டு வருகின்றது. அவ்வாறு திறந்து விடப்படும் மழைக்கால உபரி நீர் வீணாகச்
சென்று கடலில் கலப்பதை தடுத்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவதற்காகவும், குடிநீர்
தேவைக்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க உரிய
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டு ஏறத்தாழ 85 ஆண்டுகள்
ஆகின்ற நிலையில் இதுவரையில் மேட்டூர் அணை வரவாற்றில் நிறைவேற்றப்படாத மேட்டூர்
அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில்
உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்து இத்திட்டத்தினை
செயல்படுத்திட ரூ.565.00 கோடி நிதியினையும் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.
இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும்
ஓமலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 4,238 ஏக்கர் நிலங்கள்
பயன்பெறக்கூடிய வகையில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட ஏரிகள்
என மொத்தம் 100 ஏரிகளில் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீர்
நிரப்பப்படுகின்றது. இந்நீரைக் கொண்டு நீரேற்றுத் திட்டம் (டுகைவ ஐசசபையவiடிn) மூலமாக குழாய்
வழியாக மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரி மற்றும் நங்கவள்ளி ஏரி ஆகிய 2 ஏரிகளில் நீர் நிரப்பி
மற்ற பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் இத்திட்டம்
தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி
ஒன்றியங்களுக்குட்பட்ட 12 பொதுப் பணித்துறை ஏரிகள் மற்றும் 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள்
மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகள் மற்றும் குட்டைகளுக்கு இந்நீர் நிரப்ப
திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாவதாக, 2 ஏரிகளில் தண்ணீரை நிரப்பி அதிலிருந்து 4,238 ஏக்கர் நிலங்களும்
பயன்பெறும் வகையில் குழாய் வழியாகவும், திறந்த கால்வாய் மூலமாகவும் தண்ணீரை
கொண்டு செல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.565.00 கோடி மதிப்பீட்டில்
செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கால அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நில அளவீட்டு
பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 20 நாட்களுக்குள் இந்த அளவீட்டுப் பணிகள்
நிறைவடையும். பின்னர் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேட்டூர்
அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில்
உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு
தேவையான நீரும், பொதுமக்களுக்கு தேவைப்படும் குடிநீருக்கும் இத்தண்ணீர்
உபயோகப்படும். இத்திட்டம் மிகவும் அற்புதமான திட்டம். இதனை விவசாயிகள், பொதுமக்கள்
என அனைவரும் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் தாங்களாகவே
முன்வந்து இத்திட்டத்தினை விரைந்து நிறைவேற்றிட தேவையான அனைத்து உதவிகளையும்
அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது." என்று தெரிவித்தார்.



Conclusion:இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் .திவாகர், மேட்டூர் சார்
ஆட்சியர் ஜி.சரவணன், பொதுப் பணித்துறை (சரபங்கா வடிநிலக் கோட்டம்) செயற்
பொறியாளர் .கௌதமன், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் .சு.ஹசீன்பானு உட்பட
வருவாய்த்துறை, பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை, நில அளவைத்துறை
உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.