ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சேலம் நீதிமன்றத்தில் இர்ஃபான் சரண்!

author img

By

Published : Oct 1, 2019, 7:02 PM IST

சேலம்: நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இர்ஃபான் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

neet-forgery-irfan-surrender-in-salem-court

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவன் உதித்சூர்யாவை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து நடத்திய விசாரணையில் மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு சம்பவம் தொடர்பாக மருத்துவர் முகமது சபி என்பவர் நேற்று முன்தினம் சிபிசிஐடி காவல்துறையினரால் வாணியம்பாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரது மகன் இர்ஃபான் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய சிபிசிஐடியினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இர்ஃபான்

சம்பந்தப்பட்ட மாணவர் இர்ஃபான் மொரிசியஸ் நாட்டில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியான சூழலில் மாணவன் இர்ஃபான் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சிவா முன்னிலையில் இன்று சரணடைந்தார். சரணடைந்த இர்ஃபானை வரும் ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இர்ஃபான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மாணவர் இர்ஃபான் மொரிசியஸ் நாட்டில் மருத்துவம் படித்து வருவதாகவும் தருமபுரியில் மருத்துவப் படிப்பில் அவர் சேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இர்ஃபான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் பேட்டி

மேலும், இர்ஃபான் மற்றும் அவரின் பெற்றோருக்கு சிபிசிஐடியினர் நெருக்கடி கொடுப்பதாக வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்க’ - முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

Intro:நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இர்ஃபான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


Body:

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது மாணவன் உதித்சூர்யாவை சிபிசிஐடி போலீசார்கைது செய்து நடத்திய விசாரணையில் மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு சம்பவம் தொடர்பாக மருத்துவர் முகமது சபி ஜான் என்பவரை நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் வாணியம்பாடியில் கைது செய்தனர். இவரது மகன் இர்பான் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மாணவனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவன் இர்பான் மொரிசியஸ் நாட்டில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது இந்த நிலையில் மாணவன் இர்பான் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சிவா முன்னிலையில் சரணடைந்தார்.

Conclusion:
சரணடைந்த இர்பானை வரும் ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இர்பான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ' மாணவர் இர்பான் மொரிசியஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படிப்பு வருவதாகவும் தர்மபுரியில் மருத்துவ படிப்பில் அவர் சேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி போலீசார் இர்பான் மற்றும் அவரின் பெற்றோருக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் மேலும் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.