ETV Bharat / state

‘உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்க’ - முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

author img

By

Published : Sep 30, 2019, 8:55 PM IST

ஈரோடு: மருத்துவக் கல்லூரியில் ஆள் மாறாட்ட முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை ரத்து செய்து பழைய முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெற மாநில அரசு ஆவண செய்யவேண்டும் என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

Cancel the Neet exam to Prevent Transformational Abuse at the Medical College says ex. mla balabharathi

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தோப்பூர் காலனி பகுதியில் 200 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா கேட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலபாரதி, ‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடைபெற்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை தொடர்ந்து கோவை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,600 பேர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்கு தகுதியும், திறமையும் வேண்டும் என நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த போலி மருத்துவர்களாக மக்களின் நோய்களை எவ்வாறு குணப்படுத்துவர். அரசு மருத்துவக் கல்லூரிகளிலே இந்த நிலை என்றால், தனியார் கல்லூரிகளில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

பாலபாரதி செய்தியாளர் சந்திப்பு

தேர்விற்காக விண்ணப்பித்தது ஒரு மாணவர், தேர்வெழுதியது ஒரு மாணவர், வெற்றி பெற்றவர் ஒரு மாணவர் என்ற நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய்கள் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி, நீட் தேர்வை ரத்து செய்து ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெற மாநில அரசு ஆவண செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

Intro:Body:tn_erd_03_sathy_cpm_balamathi_vis_tn10009
tn_erd_03_sathy_cpm_balamathi_byte_tn10009


நீட் தேர்வில் ஆள் மாற்றாட்ட முறைகேடு. 1600 பேர் வரை ஆள்மாறாட்டம் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்து பழைய முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெற் வேண்டும். சத்தியமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேட்டி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தோப்பூர் காலனி பகுதியில் வசித்து வரும் 200 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா கேட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறை கேடு நடைபெற்றுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை தொடர்ந்து கோவை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1600 பேர் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விண்ணப்பம் செய்தது ஒரு மாணவர், தேர்வெழுதியது ஒரு மாணவர், வெற்றி பெற்றவர் ஒரு மாணவர் என்ற நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் பலகோடி ருபாய்கள் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றி பெறச்செய்வோம் என்றார்.

பேட்டி
பாலபாரதி, முன்னாள் எம்எல்ஏ
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.