ETV Bharat / state

அதிமுகவில் ஐக்கியமான திமுகவினர்.. எடப்பாடி முன்னிலையில் இணைந்தனர்!

author img

By

Published : Jul 31, 2023, 7:23 AM IST

salem
சேலம்

எடப்பாடி மற்றும் ஓமலூர் பகுதிகளைச் சேர்ந்த 80 பேர் திமுகவில் இருந்து விலகி திடீரென அதிமுகவில் இணைந்தனர்.

சேலம்: சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற காசாளர் அய்யம்பெருமாள் தலைமையில் சமுத்திரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த திமுகவினர் 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதேபோல் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சேலம் புறநகர் மாவட்டம் அம்மா பேரவை முன்னாள் செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில் ஆரூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணக்குபட்டி திமுக கிளை அவைத் தலைவர் சண்முகம் தலைமையில் நாகிரெட்டியூர், வெள்ளகரட்டூர், கணக்குபட்டி மற்றும் கோழிகாட்டானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 பேர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கொங்கணாபுரம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி உடன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிமுக சார்பில் 30 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழ்: சேலம் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மெய்யனூர் பகுதியில் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி "புரட்சித்தலைவி அம்மா இலவச தையல் பயிற்சி நிலையம்" தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான மகளிர் தையல் பயிற்சி பெற்று வருகிறது. அந்த வகையில், இலவச தையல் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு தையல் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம், மாநகர பொருளாளர் வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், பகுதி கழக செலாளர்கள் மாரியப்பன், முருகன், சண்முகம், பாண்டியன், யாதவமூர்த்தி மற்றும் வட்டக் கழக செயலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை" - சரத்குமார் திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.