ETV Bharat / state

கண்களை கட்டிக்கொண்டு சாதனை படைத்த சிறுவனுக்கு விருது!

author img

By

Published : Aug 21, 2021, 4:21 PM IST

கண்களைக் கட்டிக்கொண்டு சிறுவன் சாதனை நிகழ்த்துவது தொடர்பான காணொலி
கண்களைக் கட்டிக்கொண்டு சிறுவன் சாதனை நிகழ்த்துவது தொடர்பான காணொலி

கண்களைக் கட்டி கொண்டு சுமார் 10 நிமிடத்தில், 100க்கும் மேற்பட்ட பொருட்களின் பெயர், நிறங்களை சரியாக சொல்லி சாதனை படைத்த சிறுவனுக்கு, நோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சேலம்: சேலத்தின் ஜான்சன் பேட்டை பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள். குத்துச்சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சரண்தேவ் (10). அரசு உதவிபெறும் பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சரண்தேவ், தனது தந்தையிடம் மனதை ஒருமுகப்படுத்தும் பல்வேறு கலைகளை கற்று வந்துள்ளார்.

அவற்றுள் யோகா கலைகளில் ஒன்றான மூன்றாவது கண் பயிற்சியும், சிறுவன் சரண்தேவுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. கண்களை கட்டிக்கொண்டு எதிரில் உள்ள பொருட்களின் பெயர்கள், நிறம், முக்கிய பிரமுகர்களின் படம் உள்ளிட்டவற்றை சரியாக கணித்துச் சொல்லும் பயிற்சியை, சரண்தேவ் பெற்று வந்துள்ளான்.

கண்களைக் கட்டிக்கொண்டு சிறுவன் சாதனை நிகழ்த்துவது தொடர்பான காணொலி

கண்களைக் கட்டிக்கொண்டு நிறம், பெயர்களைக் கூறிய சிறுவன்

இதன் தொடர்ச்சியாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை நிகழ்ச்சியை, சிறுவன் சரண் தேவ் இன்று (ஆக.21) மேற்கொண்டார்.

அதன்படி பள்ளியின் ஒரு அறையில் இருந்த ஆசிரியர்கள், பந்து, பூக்கள், பாடப்புத்தகங்கள், விளையாட்டு சாதனங்கள், கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சிறுவன் முன்பு அலைபேசியில் காண்பித்தனர். அதனை உணர்ந்த சரண் தேவ், கண்களை கட்டி கொண்டே சுமார் 10 நிமிடத்தில், 100க்கும் மேற்பட்ட பொருட்களின் நிறம், பெயர்களைக் கூறி, சிறுவன் சரண்தேவ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சிறுவனுக்கு நோபல் இளம் சாதனையாளர் விருது வழங்கல்
சிறுவனுக்கு நோபல் இளம் சாதனையாளர் விருது வழங்கல்

நிகழ்ச்சியைக் கண்ட நோபல் உலக சாதனை புத்தக நிர்வாகிகள், சிறுவன் சரண் தேவ்விற்கு இளம் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் சிறுவன சரண் தேவ்வுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாரம்பரிய ஊஞ்சலில் ஆடி ஓணம் கொண்டாடிய சசி தரூர் எம்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.