ETV Bharat / state

இடுகாட்டிற்குப் பாதையின்றி வயல் வழியாக சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்

author img

By

Published : Nov 18, 2021, 12:09 PM IST

இடுகாட்டிற்கு செல்ல பாதையில்லாமல் வயல் வழியாக சடலத்தை எடுத்துச் சென்ற தாராபுரம் கிராம மக்கள்
இடுகாட்டிற்கு பாதையில்லாமல் வயல் வழியாக சடலத்தை எடுத்துச் சென்றுள்ள அவலம்

தாராபுரம் அருகே இடுகாட்டிற்குச் செல்ல பாதையில்லாமல் மக்கள் வயல் வழியாக சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதற்கு அலுவலர்கள் தரப்பிலிருந்தும் எவ்வித நடவடிக்கையில் இல்லை.

ராணிப்பேட்டை: தாராபுரம் அருகே இடையன்தாங்கள் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் யாரேனும் இறந்துவிட்டால், இறந்தவரை இடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டுவருகின்றனர் இப்பகுதியினர். இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முந்தினம் (நவம்பர் 16) அப்பகுதியில் முனியம்மாள் (75) என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார். இதனால் இடுகாட்டிற்குச் சடலத்தை எடுத்துச் செல்ல வழியில்லாமல் உறவினர்கள், கிராம மக்கள் தவித்தனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாலாஜா பணப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இடுகாட்டிற்குப் பாதையில்லாமல் வயல் வழியாகச் சடலத்தை எடுத்துச் சென்றுள்ள அவலம்

இது குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் மேகநாதன், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு மூதாட்டியின் சடலத்தை இடுப்பளவு நீரிலும் நெல் பயிரிடப்பட்டிருந்த வேளாண் நிலத்தின் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமந்துசெல்லும் அவலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.