ராமேஸ்வரத்தில் 6289 சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழா: மத்திய நிதியமைச்சர் துவக்கி வைப்பு!

ராமேஸ்வரத்தில் 6289 சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழா: மத்திய நிதியமைச்சர் துவக்கி வைப்பு!
Union Finance Minister: ராமேஸ்வரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தீவில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்குத் தனியார் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றித் துவங்கி வைத்தார்.
இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “அன்றைய காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஒரு விழாவில் பேசிய போது கஷ்டப்படும் வியாபாரிகளுக்கோ, சிறுதொழில் முனைவருக்கோ நூறு ரூபாய்க் கடன் வழங்கினால் அது பல இடைத்தரகர்கள் மூலம் சென்று கடன் பெறுவோர் கையில் பத்து ரூபாய் மட்டும் தான் கிடைக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
-
Smt @nsitharaman hands over sanction letters to #PMSVANidhi beneficiaries along with Sound Box/QR Codes to facilitate digital transactions during the #PMSVANidhi Outreach Programme in Virudhunagar, Tamil Nadu.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) November 19, 2023
In Tamil Nadu, under #PMSVANidhi, a total of 4.50 lakh street vendors… pic.twitter.com/cnqfEpTfE6
அதுபோல் நடக்கக்கூடாது என்று தான் பிரதமர் மோடி அரசு, டிஜிட்டல் மயமாக்கி எந்த ஒரு இடைத்தரகர் இல்லாமல் கடன் பெறும் பயனாளிகளுக்கு அவரது வங்கிக் கணக்கில் பணம் நேரடியாகச் செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டு தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விழாவில் 6289 சாலையோர வியாபாரிகளுக்குத் தனியார் வங்கி மூலம் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
