ETV Bharat / state

திருடர்களை ரகசியமாக பிடித்த தனிப்படையினர்

author img

By

Published : Aug 7, 2019, 3:31 AM IST

திருடர்கள்

ராமநாதபுரம்: பரமக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட ஐந்து பேரை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிற்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. புகாரின் அடிப்படையில் பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமசுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தின் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கருமலையான் என்பவரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

திருடர்கள்
தனிப்படையினர் கைது செய்த திருடர்கள்

மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது கூட்டாளிகளான கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த ஐயப்பன், கண்ணன் என்ற வெள்ளி கண்ணன், தேனி சின்னமனூரைச் சேர்ந்த ஹக்கிம் ராஜா, பரமக்குடியைச் சேர்ந்த குமார் ஆகியோரை கைது செய்து 30 பவுன் நகைகளை கைப்பற்றினர்.

பின்னர் இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று பரமக்குடியில் நடந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் தனிப்படையினர் விசாரணை செய்து வந்தனர். அந்த விசாரணையில் சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பரமக்குடி சுந்தரராஜபட்டணத்தைச் சேர்ந்த பானுப்பிரியா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.6

பரமக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட
பெண் உள்ளிட்ட ஐந்து பேர் கைது
இவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகள் மீட்புBody:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தனிப்படை அமைத்து தேடும் பணியை முடுக்கி விட்டிருந்தார். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது, பரமக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற திருட்டு சம்பவங்களை தொடர்ந்து, பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமசுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு கடந்த 28.7.2019-ம் தேதி பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த கருமலையான் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சமீபகாலமாக பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மேலும், அவரை விசாரணை செய்ததில், கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த ஐயப்பன் (20), கண்ணன் என்ற வெள்ளி கண்ணன்(32), தேனி சின்னமனூரைச் சேர்ந்த ஹக்கிம் ராஜா (38), பரமக்குடியைச் சேர்ந்த குமார் (20) ஆகியோருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து, முப்பதேகால் பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டது.

மேலும், கடந்த 5.8.2019 அன்று பரமக்குடியில் இரு வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. இதுதொடர்பாக, பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படையினர் விசாரணை செய்து, சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன், இத்திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பரமக்குடி சுந்தரராஜபட்டணத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பானுப்பிரியா (30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.6,000-மும் கைப்பற்றப்பட்டது. பானுப்பிரியா ஏற்கனவே அபிராமம்ம காவல்நிலைய திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஆவார் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.