ETV Bharat / state

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்...

author img

By

Published : Dec 9, 2022, 11:02 PM IST

தெற்கு ரயில் பொது மேலாளர் ஆர்.என்.சிங்
தெற்கு ரயில் பொது மேலாளர் ஆர்.என்.சிங்

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் இந்திய ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துப்படும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் 90 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்படும் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். தொடர்ந்து ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையிலான புதிய ரயில்வே பாதை திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், "ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் 2 மாதத்தில் துவங்க உள்ளதாகவும், பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு வரைபடங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் போன்ற பெரிய சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுக்கு என தனித்தனி முனையங்கள் அமைய இருப்பதாகவும், விசாலமான வாகன நிறுத்தம், இரண்டு மாடி ரயில் நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் அமைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை : தெற்கு ரயில் பொது மேலாளர் ஆய்வு
புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்றும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில் பாதைக்கான நில கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். ராமேஸ்வரம் வரையிலான மின்மயமாக்கல் பணி, உச்சிப்புளி இந்திய கடற்படையின் விமான தள விரிவாக்கத்திற்கான ரயில் பாதை மாற்றத்திற்கு பின் துவங்கும் என்றார்.இதையும் படிங்க: டெல்லியில் 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆம் ஆத்மிக்கு தாவல்!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.