ETV Bharat / state

ராமநாதபுரத்திலுள்ள நகைக்கடையில் என்ஐஏ அலுவலர்கள் திடீர் சோதனை!

author img

By

Published : Nov 3, 2019, 1:01 PM IST

Updated : Nov 3, 2019, 1:13 PM IST

nia officers are investigating the Ramanathapuram youth

ராமநாதபுரம்: நகைக்கடையில் பணிபுரியும் இளைஞர் ஒருவருக்கு தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கருதி, என்ஐஏ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள மாயாகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அஹமத்துல்லா. இவர், 2016ஆம் ஆண்டு துபாயில் பணிபுரிந்த போது அங்கிருந்த பிரிவினைவாத அமைப்புக் கூட்டங்களில் பங்கேற்றதாக அறிய வருகிறது. துபாயிலிருந்து திரும்பிய அவர், ராமநாதபுரத்திலுள்ள நகைக் கடையொன்றில் தற்போது வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் மாயாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர் பணிபுரியும் நகைக் கடைக்குச்சென்று நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். பின்னர் அஹமத்துல்லாவிடம் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்திய கடை

இதையும் படிங்க: ’புதிய கல்விக் கொள்கையை உயிரைக் கொடுத்து தடுப்போம்’

Intro:இராமநாதபுரம்
நவ.2

இராமநாதபுரம் மாவத்தில் உள்ள நகைக் கடையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை.Body:இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள
மாயாகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்த அஹமத்துல்லா என்பவர்
2016ல் துபாயில் இருந்தபோது அங்கு , பிரிவினைவாத அமைப்பு கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரான இராமநாதபுரம் திரும்பிய அஹமத்துல்லா, ராமநாதபுரத்தில் உள்ள ஜமாலியா ஜுவல்ஸ் கடையில் 3 மாதமாக வேலை செய்து வருகிறார்.
மாயாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் விசாரித்த என்ஐஏ அதிகாரிகள், அஹமத்துல்லாவிடம் நேரில் விசாரிக்க ராமநாதபுரம் உள்ள ஜமாலியா நகைக்கடையில் 4மணி நேரத்திற்க்கும் மேலாக கடையை சோதனையிட்டு அஹமதுல்லா நேரில் விசாரணை நடத்திச் சென்றனர். இதனால் அப்பகுதியில
சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Conclusion:
Last Updated :Nov 3, 2019, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.