ETV Bharat / state

தடுப்பூசிகள் தயார் செய்தால் இந்தியாவிற்கே சப்ளை செய்யலாம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

author img

By

Published : Jul 10, 2021, 12:20 PM IST

-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் தயார் செய்தால் இந்தியாவிற்கு உற்பத்தி செய்து கொடுக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்: அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி, கரோனா சிகிச்சை அறை உள்ளிட்ட பணிகளை காதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேற்று (ஜூலை 10) ஆய்வு செய்தார்.

கரோனா அறையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் நலம் விசாரித்தார். இதன் பின் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சரிடம் நேரம் கோரப்பட்டுள்ளது. நேரம் கிடைத்த பிறகு நேரடியாக சென்று வலியுறுத்தப்படும். கடந்த கால ஆட்சியில் சுகாதாரத் துறை முறைகேடுகளை முறைப்படுத்தி வருகிறோம்.

தவறிழைத்தோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துறையில் பணியாளர் நியமனம் அவுட் சோர்சிங் முறை மாற்றப்பட்டு பணியாளர்களுக்கு முழு ஊதியம் கிடைக்கும் வகையில் நேரடி நியமனமாக மாற்றப்பட்டுள்ளது. ஜிகா நோய் குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை.

கரோனா தடுப்பூசி உற்பத்தி

அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த கரோனா உபகரணங்கள் முறைகேடுகள் அதிகளவு இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக முறைகேடுகளை சீர் செய்ப்பட்டு வருகிறது.

முறையான ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தற்போது உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் 10 ஆண்டுகளுக்கு முன் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

குன்னூரிலுள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் தயார் நிலையில் உள்ளது. செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்த பின், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி இந்த நிறுவனத்தை ஒன்றிய அரசு முறைப்படி செயல்படுத்த வேண்டும். அல்லது மாநில அரசு செயல்படுத்த அனுமதி தர வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால் ஒன்றிய அரசு இதுவரை எந்த விதமான அறிவிப்பும் கொடுக்கவில்லை.

அனுமதி கிடைத்தால் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்குத் தேவையான அனைத்து தடுப்பூசிகளை தமிழ்நாட்டிலிருந்தே உற்பத்தி செய்து கொடுக்கலாம், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழ்நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம்

ஒன்றிய அரசிடம் மாதம் 2 கோடி தடுப்பூசி கோரப்பட்டது. ஒரு கோடியே 59 லட்சத்திற்கு 26 ஆயிரத்து 550 தடுப்பூசி ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இது வரை ஒரு கோடியே 60 லட்சத்து 84 ஆயிரத்து 347 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
51 ஆயிரத்து 630 தடுப்பூசி கையிருப்பு உள்ளது. ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி கோரப்பட்டதில் 10 லட்சம் தடுப்பூசி ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. எஞ்சிய 61 லட்சம் தடுப்பூசி படிப்படியாக கிடைத்து விடும்.

ஜிகா நோய் குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை. நீரிழிவு, ரத்த அழுத்த நோயால் ஆண்டுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறப்பை தடுக்க ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் உள்ள கோடிக்கணக்கான நோயாளிகளை மருத்துவத்துறையினர் தேடிச் சென்று அவர்களை அடையாளம் கண்டு ஒரு கோடி பேருக்கு சிகிச்சையளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக உணவுத்துறை அமைச்சர் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.