புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் உண்ணதமான தூய்மை பணியை மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணியாளர்களை கௌரவித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மகளிருக்கென பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் பேசுகையில், மதிப்புமிக்க பெண்ணியத்திற்கு மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்ணின் பெருமையை உணர்ந்த நாடுகள் மட்டுமே சமூகம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் முதன்மையான நாடாக வளர்ச்சியடைந்துள்ளன. அந்த வகையில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்தக் காலத்தில் கூட பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு சமமாக, அவர்களை விட அதிகமாக முன்னேற்றமடைந்து வருவது பெருமைக்குரிய ஒன்றாகும் .
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் வகையில் மகத்தான பணியாற்றி வரும் துப்புரவுப் பெண் பணியாளர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து கௌரவித்துள்ளது மிக சிறப்பான ஒன்றாகும். உயர்ந்த குறிக்கோளும், கடின உழைப்பும் இருந்தால் பெண்களால் எதையும் சாதிக்க முடியும்.
தங்களது எண்ணத்தை செயலாக்கக் கூடிய நேர்மறையான எண்ணங்களும், சிந்தனைகளிலும் பெண்கள் தங்களது நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'சசிகலா பின்னாடி ஒரு கூட்டமே இருக்குது; அரசியல் மாற்றம் நிச்சயம்' - சுப்பிரமணியன் சுவாமி