ETV Bharat / state

"இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்களை எதிர்க்கிறோம்" - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 11:53 AM IST

TN Primary School Teachers Alliance: இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்பதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

TN Primary School Teachers Alliance
இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட திட்டங்களை எதிர்க்கிறோம் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட திட்டங்களை எதிர்க்கிறோம் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

புதுக்கோட்டை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இந்தியா முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதிய வரைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி ஆகியவை இணைந்து நாடு தழுவிய ரத யாத்திரையை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ரத யாத்திரை அக்டோபர் ஐந்தாம் தேதி டெல்லி சென்றடைகிறது. இந்த ரத யாத்திரை புதுக்கோட்டைக்கு இன்று (செப் 12) வருகை தந்தது. ஆசிரியர்கள் இந்த ரத யாத்திரை வரவேற்றனர்.

இந்த ரத யாத்திரையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரங்கராஜன், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஹரி கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் தொடர்சியாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜன், செய்தியாளர்களை சந்திது பேசினார்.

அப்போது அவர், "எப்படி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினார்களோ அதே போன்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதிய வரைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தான் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. அதே போன்று கடந்த தேர்தல் வாக்குறுதியில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை யார் அமல்படுத்துகின்றனரோ. அவர்களுக்கு அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவிக்கப்படும்.

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தாலும் நிதி வரவேண்டும் என்பதற்காக அதில் கூறப்பட்டுள்ள 'இல்லம் தேடி கல்வி' மற்றும் 'எண்ணும் எழுத்தும்' போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை ஆசிரியர் கூட்டணி கடுமையாக எதிர்க்கிறோம்.

மேலும், மாநிலக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் திறனை, மாணவர்களைக் கொண்டு சோதனை செய்யப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம். எந்த காலத்திலும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிகள் அருகில் போதைப் பொருள் விற்பனையா?.. சாட்டையை சுழற்றும் பள்ளிக் கல்வித் துறை! புது உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.