எண்ணெய் கிடங்கில் தீ: ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

author img

By

Published : Aug 27, 2021, 8:31 AM IST

oil warehouse caught fire

எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பொருள்கள் எரிந்து நாசம் அடைந்தன.

புதுக்கோட்டை: தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. தெற்கு ராஜவீதியில் ராஜா முகமது என்பவருக்குச் சொந்தமான சமையல் எண்ணெய் கிடங்கு உள்ளது.

இங்கு சமையலுக்குத் தேவையான பாமாயில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை சேமித்துவைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பாமாயில் சுத்திகரிக்கப்படும் இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. எரிந்து நாசமான எண்ணெய் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தீ குறித்து புதுக்கோட்டை நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், தீயணைப்பு வீரர்களும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்துவருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்துசெயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் அங்கே தடுக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.