ETV Bharat / state

மகளிர் உரிமைத்தொகை பெற பிச்சைக்காரனாக இருக்கணுமா? - சீமான் சரமாரி கேள்வி

author img

By

Published : Jul 8, 2023, 6:15 PM IST

Etv Bharat
Etv Bharat

பாஜக கூட்டணியில் சேர தமிழ்த்தேசியக் கொள்கையை விடுங்கள் என்ற ஹெச்.ராஜா அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்று சீமான் பதிலடி கொடுத்துள்ளார். நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் மக்கள் ஏமாந்ததைப் போல, மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலும் ஏமாற்றமே என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தமிழ்தேசியக் கொள்கையை விட்டால் பாஜக கூட்டணிக்கு அவரை வரவேற்போம் என ஹெச்.ராஜா கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஹெச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பது தான் பதிலளித்த சீமான், நட்பு என்பது வேறு; அரசியல் நிலைப்பாடு என்பது வேறு என்றும் பாஜகவிற்கு தன்னை அழைப்பது தங்களது வளர்ச்சியை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியம் ஜெயிக்கும்: தமிழ்த் தேசியம் (Tamil desiyam and Dravidam) தோற்கும் என திருமாவளவன் சொல்வதற்கு உரிமையில்லை, இந்த தமிழ்தேசியத்தை அவரிடமிருந்து தான் நாங்கள் கற்றோம் என்றும் நாங்கள் அவரது மாணவர்கள் என்றும் எப்போது ஆசிரியர்கள் ஓடி ஜெயிக்க முடியாது என்றும் மாணவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்றும் என்று அவர் கூறியுள்ளார்.

உரிமைத்தொகைப் பெற பிச்சைக்காரனாக இருக்கணுமா?: தமிழ்நாடு அரசிடம் ரூ.1000 உரிமைத்தொகை (magalir urimai thogai scheme) யாரும் கேட்கவில்லை, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை என்று தேர்தலின்போது அறிவித்த அரசு ஏன் தற்போது விதிமுறைகளை விதிப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பினார். அப்படியெனில் பிச்சைக்காரனாக இருந்தால்தான், உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்ற நிலைக்கு அரசு தள்ளிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். நகைக்கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதியாக திமுக கூறியதையடுத்து, வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துவிட்டு கடன் தள்ளுபடி கிடைக்காமல் உள்ளதைப் போன்று இந்த ரூ.1000 உரிமைத்தொகை திட்டமும் என்றார்.

காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை: டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் மன அழுத்தத்தின் காரணமாக தான் உயிரிழந்துள்ளதாகவும், 6 ஆண்டுகளாக பணிச்சுமையில் அவர் இருந்ததாகவும், தொடர்ந்து அவர் கேட்டவாறு விடுமுறை அளிக்காததால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இது போன்ற சம்பவம் இனி நடக்காமலிருக்க சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

'பிரபாகரன்' குறித்த பயனற்ற பேச்சு வேண்டாம்: சென்னை கடற்கரையில் பேனா சிலை (Pen Statue for karunanidhi) அமைத்தால் அதை கண்டிப்பாக உடைப்போம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், பிரபாகரன் (Prabhakaran Still Live) உயிரோடு உள்ளாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்பது முடிந்துபோன கதை என்றும் அதைப் பேசி பிரயோஜனம் இல்லை என்றும் விடுதலைப் புலிகள் (LTTE) மீதான தடையை நீக்குவதற்கும், அவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்கும், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவும், கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை தமிழர்களுக்கு அரசு வேலை: ராணுவம், காவல்துறை ஆகியவற்றில் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என இலங்கை அரசையும், இந்திய அரசையும் வலியுறுத்தினார். மணிப்பூர் பிரச்னையை திசை திருப்புவே, பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு திசை திருப்புவதாகவும், இதேபோல தான், தமிழ்நாட்டிலும் செந்தில் பாலாஜி மற்றும் ஆளுநர் பிரச்சனையை தமிழ்நாடு அரசு கையில் எடுத்து பிற பிரச்னைகளை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதாவின் சமூகநீதி: கலைஞருக்கு ஒரு 'பராசக்தி' (Parasakthi) என்றால், மாரி செல்வராஜுக்கு ஒரு 'மாமன்னன்' (Maamannan) என்று தான் கூற வேண்டும், இதில் உதயநிதி எங்கிருந்து வருகிறார். இது போன்ற பட்டியல் இன சமூக மக்களின் பிரச்னைகளை பேசும் படங்கள் வருவதை வரவேற்கிறேன். இதே போல சமூக நீதி குறித்து இயக்குளை பா.ரஞ்சித் கூறிய கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன் என்றார். சமூகநீதியை பேசாத ஜெயலலிதா பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழுமலை, தனபால் ஆகியோரை பதவிக் கொடுத்து சமூகநீதியை நிலைநாட்டினார். ஆனால், சமூக நீதியை பேசும் திமுக சமூகநீதியை நிலைநாட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். பெரம்பலூர் தொகுதி பொது தொகுதியாக மாறியவுடன் ஆ.ராசாவை நீலகிரி தனித்தொகுதிக்கு மாற்றியது ஏன்? இதுதான் சமூக நீதியை நிலைநாட்டுவதா? என்று கேள்வியெழுப்பினார்.

'மாமன்னன்' குறித்து வீண் பேச்சுகள் வேண்டாம்: கிருஷ்ணசாமி இப்போது இது போன்ற படங்கள் வரக்கூடாது பேசுவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கூறிய சீமான், 'தேவர் மகன், விருமாண்டி, சண்டியர்' படங்கள் வரும்போது அவர் எவ்வாறு எதிர்ப்புகளை தெரிவித்தார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். விஜய் அரசியலுக்கு வரட்டும் மக்கள் பிரச்னைக்கு போராடட்டும் அதை நான் வரவேற்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்றார்.

குழந்தையின் கை பறிபோன விவகாரம்;அமைச்சர் பொறுப்புடன் பேசியிருக்கலாம்: சென்னையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தான், பச்சிளம் குழந்தையின் கை பறிபோனதாகவும், பிஞ்சு குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி இழப்பீடு வழங்குவதை விட்டுவிட்டு முறையற்ற முறையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கூறுவது ஏற்புடையது அல்ல என்றார். இது போன்ற பல சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடந்து வருதாகவும் அதை மறைக்க முயற்சிப்பதாகவும், இனிமேல் அரசு மருத்துவமனைகளில் கவனமாக சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தியின் பதவி நீக்கம் (Disqualified Rahul Gandhi) என்பது பழிவாங்கும் செயல் என்றும் குஜராத் நீதிமன்றத்தில் எப்படி அவருக்கு நீதி கிடைக்கும் என்று கூற முடியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

சர்வாதிகாரியாக நானும் இருப்பேன்: மக்களால் தோற்கடிக்கப்பட்ட பாஜக தலைவர் அருண் ஜெட்லியை, மாநிலங்களவை உறுப்பினராக்கிய மத்திய அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்வதாகவும், கட்சியில் சர்வாதிகாரியாக இருந்தால் தான் கட்சியை வளர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதைத்தான் நாம் தமிழர் கட்சியில் தானே செய்வதாகவும், இதை கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது; விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம். இல்லாவிட்டால் வெளியே செல்லலாம் என்றார்.

இதையும் படிங்க: உரிமைத்தொகை பெற திமுக உறுப்பினர் அட்டை கட்டாயம் - அண்ணாமலை விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.