ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் அனுமதி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 9:21 PM IST

law Minister Ragupathy
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

law Minister Ragupathy: உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா மீதான குட்கா வழக்கு விசாரனையைத் தொடர ஆளுநர் அனுமதி அளித்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தனர்.

இந்த கருத்தரங்கில் 2024 உலக முதலீடுகள் மாநாட்டிற்கு தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு கடனுதவித் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், "உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா மீதான குட்கா வழக்கு விசாரனையைத் தொடர ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார். ஆளுநர் 13ஆம் தேதி அனுமதி அளித்ததை அன்றே சொல்லி இருந்தால் நாங்கள் ஏன் கூட்டம் போட போகிறோம்.

தமிழக ஆளுநர் கடைசியாக அனுப்பப்பட்ட 5 மசோதக்களை நிறுத்தி வைத்துள்ளார். 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பி உள்ளார். தமிழசை சௌந்தரராஜன் தெலங்கானவில் போய் அங்குள்ள முதலமைச்சரோடு இணக்கமாக போகட்டும். அதன் பின்பு தமிழகத்திற்கு அறிவுரை கூறட்டும். குட்கா வழக்கில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று சிபிஐக்கு நாங்கள் தகவல் தெரிவிப்போம். அதன் பின்பு சிபிஐ விசாரணை தொடங்குவார்கள்.

  • "தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024" நிகழ்வையொட்டி புதுக்கோட்டை மாவட்ட தொழில் மையம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற தொழில் முதலீடுகள் மாநாட்டில் கலந்து கொண்ட போது. pic.twitter.com/3MqVn3nf7r

    — எஸ்.ரகுபதி (@regupathymla) November 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விசாரணைத் தொடங்குவதற்கு முன்பு ஆதாரங்களை அதிக அளவு திரட்டி வழக்கு வலுவாக போவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். வலுவான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் நிரூபிக்காவிட்டால் வழக்கு நீர்த்துப் போய்விடும். எனவே ஆதாரங்களை வலுவாக திரட்ட அரசு நடவடிக்கை எடுக்கும். ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவகாரத்தில் நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம். திமுக என்றுமே முன் வைத்த காலை பின் வைக்காது.

திமுகவைப் போல் ஒரு சகிப்புத்தன்மைக் கொண்ட கட்சி போல் வேறு எந்த கட்சியும் கிடையாது. ஆளுநரின் நடவடிக்கைகளை பொறுத்துக் கொண்டு இருந்தும் சகித்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில்தான் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்தோம்.

மத்திய சிறைச் சாலைகளை ட்ரோன் மூலம் கண்காணிப்பதற்கு சிறைத்துறை தமிழக அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் உள்ளது. சிறைகளை கண்காணிப்பது அரசின் கடமை. ஆகையால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 6 எம்.பி.பி.எஸ், 122 பி.டி.எஸ் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது... மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.