ETV Bharat / state

ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான் - அமைச்சர் ரகுபதி

author img

By

Published : Jan 6, 2023, 3:08 PM IST

Etv Bharatஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தடை செய்யப்படவில்லை -  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
Etv Bharatஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தடை செய்யப்படவில்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்படவில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தடை செய்யப்படவில்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுப்போட்டி ஏற்பாடுகள் சரிவர நடைபெறாத காரணத்தினால் தான் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையான பின் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மாபெரும் சித்த மருத்துவ முகாமினை கட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மூலிகை கண்காட்சியினைப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடியும். தமிழ்நாட்டில் முதன்முதலாக நடைபெறும் புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறப்பட்டு சிறு தவறு ஏற்பட்டால் கூட, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை அது பாதிக்கும்.

எனவே, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகள் சரிவர நடைபெறாத காரணத்தினால் தான் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடை செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையான பின் ஜல்லிக்கட்டு நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துவிட்டது. விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால், தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தடைபடுவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் காரணம் ஆகிவிடும். பட்டியல் இன மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய அரசு, ஆளும் திமுக தலைமையிலான அரசு. தமிழ்நாட்டில் இரட்டை குவளை முறையை முழுமையாக ஒழிப்பதுதான் திமுக அரசின் நோக்கம்’ என்றார்.

இறையூர் சம்பவத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் விடுத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர், 'இறையூர் சம்பவத்தில் இதைவிட யாரும் நியாயமாக விசாரணை நடத்த முடியாது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது போல், தமிழ்நாட்டில் இல்லை. இந்த திமுக ஆட்சியில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள்' என்றார்.

இதையும் படிங்க:நாளை தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி - தச்சங்குறிச்சியில் களமாடத் தயாராகும் காளைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.