ETV Bharat / state

புதுக்கோட்டையில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்: ஆட்டத்தில் இறங்கிய காளையர்கள்!

author img

By

Published : Feb 2, 2020, 11:08 PM IST

புதுக்கோட்டையில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்: ஆட்டத்திலில் இறங்கிய காளையர்கள்!
புதுக்கோட்டையில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்: ஆட்டத்திலில் இறங்கிய காளையர்கள்!

புதுக்கோட்டை: கீழதானியத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க முயன்றனர்.

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகேயுள்ள கீழதானியத்தில் மாவயல் காட்டு அய்யனார் கோயில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

புதுக்கோட்டையில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்: ஆட்டத்தில் இறங்கிய காளையர்கள்!

இந்தப் போட்டியில் 650 காளைகள் மற்றும் 300 காளையர்கள் பங்கேற்றனர். வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின. பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க...‘பட்ஜெட் வாசிப்பில் திருக்குறள் பேசினால் மட்டும் நாட்டில் தேனும் பாலும் ஓடாது!’

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் கீழதானியத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார், இந்த போட்டியில் வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கி வருகின்றனர், 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள கீழதானியத்தில் மாவயல் காட்டு அய்யனார் கோவில் திருவிழாவினை நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார், முன்னதாக வீரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.போட்டியில் 650 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்கியும் அடக்க முயன்றும் வருகின்றனர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின.பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது, மேலும் இந்த போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொம்பன் காளை உள்ளிட்ட மூன்று காலங்கள் களம் கண்டது அந்த மூன்று காளைகளும் காளையர்களின் பிடியில் சிக்காமல் நின்று விளையாடியது, இந்த போட்டியில் சிறந்த முறையில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில் பீரோ குத்துவிளக்கு எவர்சில்வர் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றது இந்த போட்டியை காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை உற்சாகமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.