ETV Bharat / state

பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து

author img

By

Published : Dec 27, 2020, 7:57 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரம் அருகே பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

fire accident at iron godown in pudukkottai sivapuram
புதுக்கோட்டை: சிவபுரம் அருகே பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான இரும்பு குடோன் உள்ளது. இங்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டைப் பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு தீ எரியத் தொடங்கியதால் 50 அடி தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்து ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

புதுக்கோட்டை: சிவபுரம் அருகே பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குடோனில் பழைய டிராக்டரை வெல்டிங் வைத்து உடைக்கும்போது ஏற்பட்ட தீப்பொறி பழைய பொருள்களில் பரவி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

இதையும் படிங்க: பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.