ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டையில் 12 பேர் தேர்வு

author img

By

Published : Sep 9, 2020, 11:50 AM IST

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டையில் 12 பேர் தேர்வு
தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டையில் 12 பேர் தேர்வு

புதுக்கோட்டை: ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ள ஆசிரியர்கள் விபரம் பின்வருமாறு:

*புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நாராயணன்

*புதுக்கோட்டை அரசா் குளம் கிழக்கு பள்ளி தலைமை ஆசிரியா் க. ராஜேந்திரன்,

*தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் தே. லாரன்ஸ் அலெக்ஸாண்டா்,

*கவரப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் செ. தனலட்சுமி,

*திருஇருதய மகளிா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரா. ஏஞ்சல்,

*தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ச. அடைக்கலசாமி,

*மாா்த்தாண்டபுரம் ஆா்சி நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ஆா். புவனேஸ்வரி,

*அரசடிப்பட்டி புனித அந்தோனியா் பள்ளி தலைமை ஆசிரியா் இ. ஆல்பொ்ட் மைக்கேல்,

*குப்பக்குடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் இரா. சத்யா,

*இலுப்பூா் ஆா்.சி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் க. லட்சுமி,

* கிள்ளனூா் ,சந்திரா உதவி பெறும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோ. சந்திரா,

*குளத்தூா் முத்துசாமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் எம். சக்திவேலு ஆகியோருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்திய போது எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமாகும். தன்னலம் கருதாமல் மாணவர்களை நல்வழிப்படுத்தி சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் வகையில் டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்றையதினம் சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுகள், பதக்கம், தலா 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும்கால தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர் சமுதாயம் திகழ்கிறது. பேரிடர் காலங்களில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் முன்நின்று பணியாற்றும் தூதுவர்களாக செயல்பட்டு, மாணவர்களுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். தொடர்ந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆசிரியர்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கமாக திகழ்கின்றனர் என்று கூறி பாராட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.