ETV Bharat / state

பெரம்பலூரில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

author img

By

Published : Dec 22, 2020, 2:40 PM IST

பெரம்பலூர்: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெரம்பலூரில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

temple
temple

தமிழ்நாடு முழுவதும் வைணவத் தலங்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறப்பு வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படாமல் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்து அன்று காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை திருக்கோயில் முன் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு குற்றம் நிரூபணம்: சிபிஐ நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.