ETV Bharat / state

'பாட்டில் ஹீரோயின் படிப்பில் ஜீரோ' - பின்னணி பாடகி சுசிலா கலகல பேச்சு

author img

By

Published : Feb 25, 2023, 1:26 PM IST

பெரம்பலூரில் இன்ஸ்பிரேஷன் ஐகான் விருது பெற்ற பிரபல பாடகி பத்மபூஷன் சுசிலா, மாணவிகளுக்கு கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தனது வாழ்க்கையை எடுத்துக்காட்டி பேசினார்.

பாடகி பத்மபூஷன் சுசிலா
பாடகி பத்மபூஷன் சுசிலா
பாடகி பத்மபூஷன் சுசிலா பேச்சு

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில், ‘நட்சத்திர கலை விழா’ கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிகளுக்குத் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சினிமா பிரபலங்கள் பங்கேற்றுச் சிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் இரண்டாம் நாளான நேற்று (பிப் 24) பிரபல பாடகி பத்மபூஷன் பி.சுசிலா கலந்துகொண்டார். அவருக்கு “இன்ஸ்பிரேஷன் ஐகான்” விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பணமுடிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது மற்றும் பணமுடிப்புகளைத் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் வழங்கி பாராட்டினார். அப்போது கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் சுல்தான் இப்ராஹிம்-ற்க்கு “Best Social Community & Achiever Award” மற்றும் 1 லட்சம் ரூபாய் பணமுடிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நலிவடைந்த 700 இஸ்லாமிய குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வட்டியில்லாக் கடன் வழங்கி அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவியதற்காக, சுல்தான் இப்ராஹிம்-ற்க்கு இந்த விருது வழங்கப்பட்டது.

பின்னர், எசனை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (எ) சுருளிராஜன் என்ற விவசாயிக்கு “Change Maker Award” மற்றும் 1 லட்சம் ரூபாய் பணமுடிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. திராட்சை மற்றும் ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் பயிரிடக்கூடிய காய்கறிகளை எசனையில் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தியதற்காக சுருளிராஜனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரபல பாடகி பத்மபூஷன் சுசிலா, தான் பாட்டில் கதாநாயகியாக இருந்தாலும், படிப்பில் ஜீரோ தான் எனவும், மாணவிகளுக்குக் கல்வி மிகவும் முக்கியமானது என்றும், ஆகையால் படிப்பை என்றும் கைவிடக் கூடாது என மாணவிகளுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர் தனது குரலில் “சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து” பாடலை பாடி அரங்கை அதிரச்செய்தார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு மாதம் ரூ.1000 குறித்து அடுத்த மாதம் அறிவிப்பு - ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.