ETV Bharat / state

திருடிய பணத்தை திரும்பக் கேட்டு தகராறு: பெரம்பலூரில் பிரபல ரவுடி அடித்துக்கொலை

author img

By

Published : Dec 5, 2019, 11:07 PM IST

rowdy murder
பிரபல ரவுடி அடித்துக்கொலை

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் அருகே பணத்தகராறில் பிரபல ரவுடி அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மார்கெட் சேகர் (எ) சேகர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேகர், பெரம்பலூரைச் சேர்ந்த கோபி என்பவரின் வீட்டில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை திருடியதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபி, அவரது நண்பர் ரஃபீக், சேகர் ஆகியோர் பழைய பேருந்து நிலையம் அருகே அங்காளம்மன் கோயிலில் மது அருந்தியுள்ளனர். அப்போது, திருடிய பணத்தை திரும்பக் கேட்டதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ரஃபீக் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையில் திடீரென்று தீப்பிடித்த லாரி! - நாட்றம்பள்ளியில் பரபரப்பு

Intro:பெரம்பலூரில் பிரபல ரவுடி அடித்துக்கொலை . போலீசார் விசாரணைBody:பெரம்பலூர் அருகேயுள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் மார்கெட் சேகர் (எ) சேகர்.
பிரபல ரவுடியான இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரம்பலூரைச் சேர்ந்த தீனதயாளன் மகன் கோபி என்பவரது வீட்டில் வைத்திருந்த ரூ 30 ஆயிரத்தை சேகர் திருடி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கோபி, அவரது நண்பர் ரபீக் ஆகியோருடன் சேகர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேஅங்காளம்மன் கோவில் மது அருந்தினார்களாம்.
அப்போது திருடிய பணத்தை திரும்ப கேட்டதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரபீக் கட்டையால் சேகரை தாக்கியதில் பலத்த காயமடைந்த சேகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.Conclusion:இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.