புதைந்த நிலையில் 7 அடி நீளமுள்ள கல் மரம் கண்டுபிடிப்பு

author img

By

Published : Oct 21, 2020, 10:56 PM IST

புதைந்த நிலையில் 7 அடி நீளமுள்ள கல் மரம் கண்டுபிடிப்பு
புதைந்த நிலையில் 7 அடி நீளமுள்ள கல் மரம் கண்டுபிடிப்பு ()

பெரம்பலூர்: குன்னம் பகுதியில் உள்ள ஓடையில் பாறைகளுக்கு இடையே புதைந்த நிலையில் இருந்த 7 அடி நீளமுள்ள கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டது.

பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது, பெரம்பலூர் மாவட்டம். சாத்தனூர் கல்மரம், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில், ரஞ்சன்குடி கோட்டை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புகளை கொண்டுள்ளது ஆகியவை இங்கு உள்ளன.

கடந்த 1940ஆம் ஆண்டு புவியியல் ஆராய்ச்சியாளர் எம்.எஸ். கிருஷ்ணன் என்பவரால், பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூரில் 18 மீட்டர் நீளம் கொண்ட கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டது. காலப்போக்கில் சிதைந்து தற்போது 12 மீட்டர் நீளமுள்ள கல் மரமாக உள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் உள்ள ஓடையில் பாறைகளுக்கிடையே புதைந்த நிலையில் 7 அடி நீளமுள்ள கல்மரம் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குன்னம் கிராமத்தில் 'ஆனைவாரி ஓடை' என்று சொல்லப்படும் இந்த ஓடை, வரகூர் குளப்பாடி வழியாக மழைக்காலங்களில் நீர்வரத்து வரக்கூடிய ஓடையாக உள்ளது.

இந்நிலையில் இந்த ஓடையில் பாறைகளுக்கு இடையே தற்போது 'கல்மரம்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் புதைந்த நிலையில் கல் படிமங்களாக காணக்கிடைக்கிறது. மேலும் பாறைகளில் சிறிய வகை கிணறுகளும் தெரியவருகிறது. இதன் மூலம் 'ஆனைவாரி ஓடையானது' பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் கருவூலமாக நீண்ட தொலைவிற்கு காணக் கிடைப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். குன்னம் பெரிய ஏரியில் 'அமௌன்ட்' எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் காணக் கிடைக்கின்றது.

புதைந்த நிலையில் 7 அடி நீளமுள்ள கல் மரம் கண்டுபிடிப்பு
புதைந்த நிலையில் 7 அடி நீளமுள்ள கல் மரம் கண்டுபிடிப்பு
சாத்தனூர் கல்மரம் கண்டறியப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர், அண்மைக்காலத்தில் மட்டும் சாகுடிகாடு, கரம்பயம், புன்னம் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் மூன்று புதிய கல்மரங்கள் கிடைத்திருப்பது, பெரம்பலூர் மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைய தலைமுறையினருக்குப் புவியியல் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள கல்மரப் படிமங்கள் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

இதையும் படிங்க: தோண்ட தோண்ட தொல்லியல் துறைக்கு ஷாக் - திரும்பிப் பார்க்க வைக்கும் திருப்பஞ்சனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.