ETV Bharat / state

போர்வெல் தொழிலாளியின் தலையில் இயந்திரம் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

author img

By

Published : Jan 25, 2020, 6:58 PM IST

தொழிலாளியின்  தலையில் இயந்திரம் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
தொழிலாளியின் தலையில் இயந்திரம் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

பெரம்பலூர்: ஆழ்துளை கிணறு தோண்டும் பணியின்போது தொழிலாளியின் தலையில் இரும்பு தகடு விழுந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன் நகரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.

இந்தப் பணியில் தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டும் பணியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இதில் சேலம் மாவட்டம் நாகியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன்(50) என்பவர் கிணறு தோண்டும் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ராட்சத இயந்திரத்தில் உள்ள ஒரு பாகம் தலையில் விழுந்தது.

போர்வெல் தொழிலாளியின் தலையில் இயந்திரம் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

இந்த விபத்தில் பலத்த காயமுற்றவர்.சம்பவ இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடலினை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை செய்யும் ஐபிஎஸ் அலுவலர் மீது புகார்

Intro:பெரம்பலூர் அருகே போர் போடும் போது போர் போடும் ராட் விழுந்து ஒருவர் பலி போலீசார் விசாரணை


Body:பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தீரன் நகர் பகுதி அருகே சின்னசாமி என்பவர் நிலத்தில் போர் போடும் பணி நடைபெற்று வந்தது அந்தப் போர் போடும் பணியில் தனியார் போர் வெல் கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர் நிலையில் போர் போடும் பொழுது போர் போடும் ராடு அங்கு வேலை செய்துவந்த சேலம் மாவட்டம் நாகியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் வயது ஐம்பது என்பவரது தலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே மாதேஸ்வரன் உயிரிழந்தார் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் உயிரிழந்த மாதேஸ்வரன் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்


Conclusion:மேலும் இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.