ETV Bharat / state

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

author img

By

Published : Aug 9, 2023, 8:28 PM IST

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் தொடங்கப்பட உள்ள காலனிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபீக் அஹமது தெரிவித்துள்ளார்.

sipcot_factory_inspection
ஜின்னா ரபீக் அஹமதுவுடன் தைவான் நாட்டின் தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள்

பீனிக்ஸ் கோத்தாரி நிறுவன தலைவர் ஜின்னா ரபீக் அஹமது பேட்டி

பெரம்பலூர்: தமிழ்நாடு அரசின் கடந்த 2022-23 பட்ஜெட்டில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதியதொழில் பூங்காக்கள் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் 243 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி திறந்து வைத்து, அதில் அமைய உள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துக்கும் ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 25ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், தைவான்நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன், 740 கோடி ரூபாய் முதலீட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதனைத்தொடர்ந்து காலணி பூங்கா அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சிப்காட் தொழில் பூங்காவில் தொடங்கப்பட உள்ள காலனிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபீக் அஹமது பெரம்பலுார் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்து, மாவட்ட ஆட்சியர் க.கற்பகத்தை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபீக் அஹமது, “தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆறு மாதங்களுக்குள் காலணி தயாரிக்கும் நிறுவனத்திற்கான 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பெரம்பலுாரிலேயே மூலப்பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டு, காலணிகள் (Shoe) தயாரிக்கப்படவுள்ளது. கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழல் தொடங்க நிறுவனங்கள் வருகின்றன. பல்வேறு பெரும் நிறுவனங்களும் பெரம்பலுார் மாவட்டத்தை நோக்கி வருகை தர உள்ளன.

மூன்று வருடங்களுக்குள் முழுமையான பணிகள் முடிக்கப்பட்டு இந்தியாவே பெரம்பலுார் மாவட்டத்தை திரும்பிப்பார்க்கும் வகையில் தொழிற்சாலை அமையவுள்ளது. மொத்தம் 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் வகையில், 5ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சிப்காட் தொழில்பூங்கா அமையவுள்ளது.

இதில் பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. வேலைவாய்ப்பில் 80 விழுக்காடு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரும் நவம்பர் மாதம் முதல் காலணிகள் உற்பத்தி தொடங்கப்படள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்... இஸ்ரோ கொடுத்த நல்ல சேதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.