கொல்லிமலையில் தொடங்கியது வல்வில் ஓரி விழா: மலர்க்கண்காட்சி தொடக்கம்!

author img

By

Published : Aug 2, 2022, 8:04 PM IST

Etv Bharatகொல்லிமலையில் துவங்கியது வல்வில் ஓரி விழா: மலர் கண்காட்சி தொடக்கம்

கொல்லிமலையில் தொடங்கியது வல்வில் ஓரி விழா, அதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியை மாவட்ட சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமி தொடங்கி வைத்துள்ளார்.

நாமக்கல் அருகே கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் அரசின் சார்பில் விழா நடத்தப்படும். இதனையொட்டி இவ்வாண்டு வல்வில் ஓரி விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இன்று(ஆகஸ்ட் 02) தொடங்கிய விழாவில் முக்கிய நிகழ்வாக தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர்க் கண்காட்சியை மாவட்ட சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.

இதில் 75 ஆயிரம் மலர்களைக்கொண்ட மாட்டு வண்டி, தேனீ, வண்ணத்துப்பூச்சி, வில், அம்பு உள்ளிட்டப்பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவங்களும், 200 கிலோ காய்கறி மற்றும் பழங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட்டின் 'தம்பி' உருவச்சின்னமும் பல்வேறு மலர்களின் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளன.

இதனைத்தொடர்ந்து செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

வல்வில் ஓரி விழாவை ஒட்டி நாளை நாமக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்ல போக்குவரத்துத்துறை சார்பில் நாமக்கல், காரவள்ளி, ராசிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்புப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கொல்லிமலையில் தொடங்கியது வல்வில் ஓரி விழா: மலர்க்கண்காட்சி தொடக்கம்!

இதையும் படிங்க:பரந்தூர் விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.