ETV Bharat / state

பியூட்டி பார்லர் பெண் ஊழியர் சடலமாக மீட்பு - ஆணவக் கொலையா? போலீசார் விசாரணை

author img

By

Published : Oct 21, 2019, 8:54 AM IST

dead

நாமக்கல்: பியூட்டி பார்லரில் வேலை பார்த்துவந்த பெண் ஒருவர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வனிதா (எ) சோபனா. இவர், திருச்செங்கோட்டில் உள்ள சுபானா பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். 29 வயதான இவருக்கு தேவா, சச்சின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை சோபனா வேலைக்குச் சென்றுள்ளார். இரவு மீண்டும் வீடு திரும்பியபோது கடைசி பேருந்தை தவறவிட்டதாகவும், தனக்கு தெரிந்த ஒருவரின் காரில் வருவதாக இரவு 8 மணிக்கு தனது கணவர் செந்திலிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்டநேரமாகியும் சோபனா வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பதற்றமடைந்த செந்தில் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளிலும் விசாரித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மொளசி காவல் நிலையத்தில் மனைவி சோபனா காணாமல் போனது குறித்து புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளிபாளையம் குட்டையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மொளசி காவல்துறையினர் சடலம் குறித்து நடத்திய விசாரணையில் இறையமங்கலத்தைச் சேர்ந்த சோபனா என்பது தெரியவந்தது. இவர், சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள குச்சிக்கிழங்கு காட்டில் தனது மகனுக்காக வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும், இவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

மகனுக்கு வாங்கி புத்தாடை
மகனுக்கு வாங்கி புத்தாடை

இதனைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஷோபனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோபனா நகைக்காக கொலை செய்யப்படவில்லை என்பது காவல்துறையினரின் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

ஷோபனாவும் செந்திலும் வேறு, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பத்து ஆண்டிற்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்துக்கொண்டனர். அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்தில் மொளசி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த பியூட்டி பார்லரில் பணிபுரியும் ஷோபனா என்ற பெண் குட்டையில் சடலமாக மீட்பு கொலையா என மொளசி காவல்துறையினர் விசாரணைBody:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில் இவரது மனைவி வனிதா என்கின்ற சோபனா. இவர் திருச்செங்கோட்டில் உள்ள சுபானா என்ற பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார். 29 வயதான இவருக்கு ஆறாம் வகுப்பு பயிலும் தேவா மற்றும் எல்கேஜி பயிலும் சச்சின் என்ற இரு மகன்கள் உள்ளனர். நேற்று காலை வேலைக்கு சென்ற இவர் தனது மகன் தேவாவின் பிறந்தநாளுக்கு துணிகளை வாங்கிக்கொண்டு வருவதாகவும் ஊருக்கு வரும் கடைசி பேருந்தை விட்டு விட்டதாகவும் ஆகையால் தனக்கு தெரிந்த ஒருவருடைய காரில் வருவதாக இரவு 8 மணிக்கு தகவல் கூறியுள்ளார். நீண்டநேரமாகியும் சோபனா வராத காரணத்தால் அக்கம்பக்கம் உள்ள வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் விசாரித்துவிட்டு இன்று காலை மொளசி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளிபாளையம் பகுதியில் ஒரு குட்டையில் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து மொளசி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலம் இறையமங்கலத்தைச் சேர்ந்த வனிதா என்கின்ற சோபனா என்பது தெரியவந்தது. இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள குச்சிக்கிழங்கு காட்டில் மகனுக்கு வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட்டுகள் இருந்துள்ளது. இவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் ஷோபனா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி நடத்திவருகிறது. சம்பவ இடத்திற்கு திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மொளசி காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை, எனவே பணம் நகைக்காக இவர் கொலை நடக்கவில்லை என்ற எண்ணத்திற்கு போலீசார் வந்துள்ளனர். ஷோபனாவும் செந்திலும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்தில் மொளசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்ற பெண் கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்ட சம்பவம் புள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.