ETV Bharat / state

100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடத மக்கள்; தனிநபராகக் கொண்டாடும் ஆசிரியர்!

author img

By

Published : Jan 17, 2020, 12:44 PM IST

நாமக்கல்: சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கடந்த 100 ஆண்டுகளாக பொங்கலை தவிர்த்துவரும் நிலையில், 18 ஆண்டுகளாக தனிநபராகப் பொங்கலைக் கொண்டாடி அக்கிராம தலைமையாசிரியர் ஒருவர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

100 ஆண்டுகளாக கிராமத்தின் பொங்கல் புரட்சி
100 ஆண்டுகளாக கிராமத்தின் பொங்கல் புரட்சி

நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில், பொங்கல் பண்டிகை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தவிர்க்கப்பட்டுவருகிறது. இந்தக் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் நபர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

இவர்கள் முன்பு, கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று, பொங்கலைச் சாப்பிட்டதாகவும் இதனால் அபசகுணம் என்ற கருதிய மக்கள் அந்தாண்டு பொங்கல் கொண்டாடுவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அடுத்த ஆண்டு, மாட்டுப்பொங்கலை கொண்டாடும்போது, கால்நடைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள், பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.

ஆனால், இந்தத் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான இளங்கோ, மக்களிடம் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை கடந்த 18 ஆண்டுகளாகக் கொண்டாடிவருகிறார். அதே போல், இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை வழக்கம்போல இளங்கோ மட்டும் கொண்டாடினார். அதில், அவரது உறவினர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கலந்துகொள்ளவில்லை.

100 ஆண்டுகளாக கிராமத்தின் பொங்கல் கொண்டாடத கிராமம்

இதுகுறித்து இளங்கோ கூறுகையில், "பொங்கல் பண்டிகை கொண்டாட மக்களை வலியுறுத்திவருகிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் கொண்டாடிய பொங்கல் பண்டிகையில் கிராம மக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு வரும் வரை நான் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவேன்" என்றார்.

இதையும் படிங்க: நீலகிரியில் கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

Intro:100ஆண்டுகளாக பொங்கலைத் தவிர்க்கும் கிராமம்; விழிப்புணர்வுக்காக 18 ஆண்டுகளாகப் பொங்கலிடும் தனி மனிதர்
Body:தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகை தவிர்க்கப்பட்டு வருகிறது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இக்கிராமத்தில் பொங்கல் பண்டிகையைத் தவிர்க்க காரணம் என்ன என்ற கேள்விக்கு கிராம மக்கள் கூறும் பதில் மக்களிடம் பண்டிகை குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதைக் காட்டியது.

சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். உழவுத்தொழிலில் பிரதானமானது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று மக்கள் வைத்த பொங்கலை சாப்பிட்டதாகவும் இதனால் அபசகுணம் என்ற கருதிய மக்கள் அந்தாண்டு பொங்கல் கொண்டாடுவதை நிறுத்தினர். இருப்பினும் அடுத்தாண்டு பொங்கல் கொண்டாடலாம் என எண்ணிய மக்கள் மாட்டுப்பொங்கலன்று கால்நடைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து வந்துள்ளனர்.


எனினும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான இளங்கோ என்பவர் மக்களிடம் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை கடந்த 18 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை வழக்கம் போல இளங்கோ மட்டும் கொண்டாடினார். இவரது கொண்டாட்டத்தில் அவரது உறவினர்கள் ஒருசிலரைத் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.

இதுகுறித்து இளங்கோ கூறும்போது, "பொங்கல் பண்டிகை கொண்டாட மக்களை வலியுறுத்தி வருகிறேன். கடந்த 18 ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகிறேன். இந்த ஆண்டும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினேன். ஆனால், கிராம மக்கள் யாரும் வரவில்லை. இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு வரும் வரை நான் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவேன்" என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.