ETV Bharat / state

நாமக்கல் முன்னாள் எம்பி குடோனில் தீ விபத்து: ரூ.9 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்!

author img

By

Published : Feb 4, 2021, 11:26 AM IST

நாமக்கல்: ராசிபுரம் முன்னாள் எம்பியின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

நாமக்கல் எம்பி குடோனில் தீ விபத்து: 9 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!
நாமக்கல் எம்பி குடோனில் தீ விபத்து: 9 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிபட்டி பகுதியில் முன்னாள் எம்பி சுந்தரத்திற்குச் சொந்தமாக மஞ்சள் குடோன் உள்ளது. இதில் 8 டன் கொண்ட சுமார் 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று (பிப். 4) அதிகாலை மஞ்சள் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்துவந்த நாமக்கல், சேலம், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் உள்ள தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் முன்னாள் எம்பி குடோனில் தீ விபத்து: ரூ.9 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்!

இருந்தபோதிலும், தீ விபத்தில் குடோனில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து தொடர்பாக ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...M-இல் தொடங்கும் சர்வாதிகாரிகளின் பெயர் - மோடியை விமர்சித்த ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.