தொடர்ந்து முட்டை விலை சரிவு: கோழிப் பண்ணையாளர்கள் கவலை!

author img

By

Published : Nov 5, 2019, 8:33 AM IST

நாமக்கல்: முட்டை உற்பத்தி அதிகரிப்பால் தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளாக இருந்த நிலையில் ஒரேநாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி 2 காசுகள் உயர்த்தப்பட்டு, மீண்டும் 4ஆம் தேதி ஐந்து காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 87 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

poultry
கோழிப் பண்ணை

இந்நிலையில் தொடர்ந்து முட்டை விற்பனையில் தேக்கம் ஏற்பட்டதால் முட்டை கொள்முதல் விலையை மேலும் 17 காசுகள் அதிரடியாக குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த நான்கு நாள்களில் 45 காசுகள் விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, "தற்போது வட மாநிலங்களில் ஷட் பூஜை பண்டிகையால் முட்டை விற்பனை மந்தம் ஏற்பட்ட நிலையில் அங்கு கடுமையாக விலை சரிந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தேக்கம் ஏற்பட்டு விற்பனை சரிந்து விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விற்பனையை அதிகரிக்கவே மீண்டும் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. வரும் நாள்களில் ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கவுள்ள நிலையில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

கோழிப்பண்ணை

மேலும் படிக்க : இரண்டு அவுச்ச முட்டை ரூ. 1700: அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்

Intro:நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் சரிந்த முட்டை விலை, இன்று ஒரே நாளில் 17 காசுகள் சரிவு, விற்பனை கடுமையாக குறைந்ததால் கடந்த 4 நாட்களில் 45 காசுகள் சரிவுBody:நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் சரிந்த முட்டை விலை இன்று ஒரே நாளில் 17 காசுகள் சரிவு, விற்பனை கடுமையாக குறைந்ததால் கடந்த 4 நாட்களில் 45 காசுகள் சரிவு,வட மாநிலங்களில் ஷட் பூஜா பண்டிகையை ஓட்டி விற்பனையில் மந்தம் நிலவுவதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல்

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளில் இருந்து இன்று ஒரே நாளில் 17 காசுகள் குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 1-ம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளாக இருந்த நிலையில் ஒரே நாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 2-ம் தேதி 2 காசுகள் உயர்த்தப்பட்டது, 4-ம் தேதி 5 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 87 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது, இந்நிலையில் தொடர்ந்து முட்டை விற்பனையில் தேக்கம் ஏற்பட்டதால் முட்டை கொள்முதல் விலையை மேலும் 17 காசுகள் அதிரடியாக குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் 45 காசுகள் விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும் போது தற்போது வட மாநிலங்களில் ஷட் பூஜா பண்டிகையால் முட்டை விற்பனை மந்தம் ஏற்பட்ட நிலையில் அங்கு கடுமையாக விலை சரிந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து உற்பத்தியும் அதிகரித்துள்ளதோடு, முட்டை தேக்கம் ஏற்பட்டதால் விற்பனை சரிந்து விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விற்பனையை அதிகரிக்கவே விலை குறைக்கப் பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் ஐயப்பன் கோவில் சீசன் துவங்க உள்ள நிலையில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.