ETV Bharat / state

முதல் நாளே களமிறங்கிய ஆட்சியர்: கவச உடை அணிந்து ஆய்வு

author img

By

Published : Jun 18, 2021, 9:10 AM IST

Namakkal, covid 19,new, Collector, inspection,PPE dress,  medical college  namakkal new collector  நாமக்கல் செய்திகள்  நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்  ஸ்ரேயா பி சிங்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அய்வு  namakkal collector inspect medical college  shreya p shing
முதல் நாளே களமிறங்கிய ஆட்சியர்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடை அணிந்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.

நாமக்கல்: நேற்று (ஜூன் 17) நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஸ்ரேயா பி சிங், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில், பாதுகாப்பு கவச உடையணிந்து ஆய்வுசெய்தார்.

அப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் அனைத்து நோயாளிகளிடம் கலந்துரையாடினார். அப்போது மருத்துவர்கள் அவர்களுக்குத் தகுந்த சிகிச்சைகளைச் சரியான நேரத்தில் அளிக்கின்றார்களா, செவிலியர் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொள்கிறார்களா, மூன்று நேரமும் தரமான உணவுகள் வழங்கப்படுகின்றனவா என நோயாளிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

முதல் நாளே களமிறங்கிய ஆட்சியர்-பாதுகாப்பு கவச உடையணிந்து ஆய்வு

இதனைத் தொடர்ந்து, கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவமும், அனைத்து அடிப்படை உதவிகளும் தகுந்த முறையில் அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கரோனா சிகிச்சைப் பிரிவினை ஸ்ரேயா சிங் ஆய்வுமேற்கொண்ட சம்பவம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சிவசங்கர் மாணவிகளுக்கு தாத்தா மாதிரி - பாபாவை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.