ETV Bharat / state

பறவைக் காய்ச்சல் எதிரொலி: மீண்டும் சரிந்த முட்டை விலை

author img

By

Published : Jan 11, 2021, 9:45 AM IST

நாமக்கல் முட்டை விலை
நாமக்கல் முட்டை விலை

நாமக்கல்: ஒரு முட்டையின் விலை ஒரேநாளில் 40 காசுகள் குறைத்து நான்கு ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 40 காசு குறைத்து 4 ரூபாய் 20 காசுகள் விலை நிர்ணயம்செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் நான்கரை கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி 3 கோடியே 70 லட்சம் முட்டைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன.

இந்த முட்டைகள் தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு சராசரியாக தினமும் 25 லட்சமும், கேரளா மாநிலத்திற்கு தினசரி ஒரு கோடி முட்டைகளும் அனுப்பப்படும் நிலையில் மீதமுள்ள முட்டைகள் சென்னை, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன.

பறவைக் காய்ச்சல் எதிரொலி: மீண்டும் சரிந்த முட்டை விலை
பறவைக் காய்ச்சல் எதிரொலி: மீண்டும் சரிந்த முட்டை விலை

இந்நிலையில், கேரளா, வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் முட்டை நுகர்வு வெகுவாகக் குறைந்துபோன நிலையில் தமிழ்நாட்டிலும் விற்பனை சரிந்து மூன்று கோடி முட்டைகளுக்கு மேல் தேக்கம் அடைந்துள்ளதால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கோழிப் பண்ணையாளர்கள் முட்டை விலையை வேகமாக குறைத்துவருகின்றனர்.

மூன்று கோடி முட்டைகளுக்கு மேல் தேக்கம்
மூன்று கோடி முட்டைகளுக்கு மேல் தேக்கம்
கடந்த 7ஆம் தேதி முட்டை விலை 5 ரூபாய் 10 காசுகளிலிருந்து 25 காசுளும், 9ஆம் தேதி 25 காசுகளும் குறைத்த நிலையில் இன்று (ஜன. 11) மீண்டும் ஒரேநாளில் 40 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணை
கோழிப்பண்ணை
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளா, வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது தடைசெய்யப்பட்டதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை அதிகளவு தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் 90 காசுகள் வரை குறைக்கப்பட்டிருந்தாகவும் இருப்பினும் பண்ணைகளில் 3 ரூபாய் 70 காசுகளுக்கே முட்டைகளை வியாபாரிகள் கொள்முதல்செய்வதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.