ETV Bharat / state

மத்திய,மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றுகிறது: கொ.ந.ம.தே கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு

author img

By

Published : Mar 22, 2019, 7:34 PM IST

கொ.ந.ம.தே கட்சி வேட்பாளர்

நாமக்கல்: மத்திய,மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் குற்றச்சாட்டினார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஆசியா மரியத்திடம் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய சின்ராஜ்,மத்தியில் உள்ள பாஜக அரசும் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.

தேர்தலில் வெற்றிபெற்று திருமணிமுத்தாறு, ராஜவாய்க்கால், காவிரி ஆற்றில் உள்ள தடுப்பணைகளை சீர்செய்வேன். கோழிப்பண்ணை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும், ஜவுளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்க்க பாடுபடுவேன் என தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Intro:நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் ராஜ் சின்ராசு இன்று வேட்பு மனு தாக்கல்


Body:தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தனது வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல்லில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராசு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஆசியா மரியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் சின்ராசு


மத்தியில் உள்ள பாஜக அரசும் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் விவசாயிகளை ஏமாற்றி வந்துள்ளது. திருமணிமுத்தாறு, ராஜவாய்க்கால், காவிரி ஆற்றில் உள்ள தடுப்பணைகளை சீர்செய்வேன். கோழிப்பண்ணை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் லாரி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ரிக் வண்டி சம்பந்தப்பட்ட பிரச்சனையையும் ஜவுளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உடனடியாக தீர்வு கண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க தான் பாடுபடுவேன் என தெரிவித்தார்.

பிரச்சாரத்தை எப்பொழுது மேற்கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு திராவிட முன்னேற்ற கழகம் அறிவுறுத்தலின்பேரில் கூடிய விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகவும் அற்புதமான தேர்தல் அறிக்கையை ஆகும். இந்த தேர்தல் அறிக்கை மூலம் உறுதியாக திமுக கூட்டணி பெறும் என தெரிவித்தார். நேற்று நடந்த அதிமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே பி பி பாஸ்கர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சமுதாயத்தை குறிப்பிட்டு உண்மையான அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நீங்கள்தான் போட்டிருப்பது இருக்க வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்சின்ராசிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர்களும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவரை தான் வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். அவர்கள் கூறியது தவறான கருத்து அனைத்து சமுதாயத்தினருக்கும் சாதி பாகுபாடின்றி தான் செயல்படுவேன் என கூறினார்.


Conclusion:இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே எஸ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.