ETV Bharat / state

நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!

author img

By

Published : Oct 12, 2019, 8:00 AM IST

நாமக்கல்: தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம், தனியார் பள்ளி மற்றும் பள்ளி இயக்குநர்களின் வீடுகளில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை

நாமக்கல் போதுப்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் இயங்கிவரும் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள், கிரீன் பார்க் நீட் பயிற்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் 5,000 மாணவர்களும், நீட் பயிற்சி மையத்தில் 2,000 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

நீட் பயிற்சி மையத்தில் வருமான வரி சோதனை

இந்நிலையில், இன்று காலை நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் பள்ளி அலுவலகம், நீட் பயிற்சி மையம், அலுவலகம், பள்ளியின் இயக்குநர்கள் சரவணன், குணசேகரன், மோகன், சுப்பிரமணி ஆகியோரின் வீடுகளில் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்றது.

அப்போது பள்ளி மாணவர் சேர்க்கை மற்றும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் விவரங்கள், அவர்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டணங்கள் குறித்த ஆவணங்கள் பற்றி விசாரணை நடைபெற்றதாகவும், பள்ளி இயக்குநர்கள், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். மேலும், இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

இதையும் படிக்கலாமே: தாமதமாக முடிந்த ஆலோசனை - கிளம்பிய தலைவர்கள்!

Intro:நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் நீட் பயிற்சி மையத்தில் நள்ளிரவு வரை தொடரும் வருமான வரித்துறை சோதனை... சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதுBody:நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம், தனியார் பள்ளி மற்றும் இயக்குனர்களின் வீடுகளில் நள்ளிரவு வரை தொடரும் வருமான வரித்துறையினர் சோதனை.சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

நாமக்கல் போதுப்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 5000 மாணவர்களும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 2000 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 700 க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நாமக்கல், சேலம்,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பள்ளி அலுவலகம்,நீட் தேர்வு மையம் அலுவலகம், பள்ளியின் இயக்குனர்கள் சரவணன், குணசேகரன், மோகன்,சுப்பிரமணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வந்தனர். அப்போது பள்ளி மாணவர் சேர்க்கை மற்றும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் விவரங்கள் அவர்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டணங்கள் குறித்த ஆவணங்கள் மற்றும் இயக்குனர்கள், அவரது உறவினர்கள் சொத்து விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நள்ளிரவு பத்து மணி வரை இந்த வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. மேலும் இச்சோதனையானது நாளையும் தொடர்ந்து நடைபெறும் என தகவல்கள் பரவி வருகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.