ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - ஏழை மாணவிக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய அமைச்சர்!

author img

By

Published : Sep 5, 2020, 2:45 PM IST

Updated : Sep 5, 2020, 3:00 PM IST

subhasowmiya
subhasowmiya

நாமக்கல்: ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் ஏழை மாணவி சுபசெளமியாவிற்கு ஆன்லைன் வகுப்பை தொடர அமைச்சர் தங்கமணி ஸ்மார்ட்போன் வழங்கினார்.

நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் கண்ணூர்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசி. கணவரை இழந்த இவருக்கு செளந்தர்யா (20), சுபசெளமியா (15) ஆகிய மகள்களும், மணிகாந்த் (14) என்ற மகனும் உள்ளனர்.

கணவனை இழந்த தமிழரசி தையல் தொழில் மூலம் தனது மூன்று பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஆன்லைன் கல்வியால் பள்ளி படிப்பை மேற்கொள்ள இயலாமல் தவித்த 11 ஆம் வகுப்பு மாணவி சுபசெளமியா குறித்து நேற்று முன்தினம் (செப்.3) ஈடிவி பாரத்தில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் ஏழை மாணவி சுபசெளமியாவுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வழங்கினர்.

ஸ்மார்ட்போன் பெற்றுக்கொண்ட மாணவி
ஸ்மார்ட்போன் பெற்றுக்கொண்ட மாணவி

இதுகுறித்து மாணவி சுபசெளமியா கூறுகையில் "தனது தாயின் வருமானத்தில் தான் மூன்று பேரும் படித்து வந்தோம். தங்களது நிலை குறித்து ஈடிவி பாரத்தில் செய்தி வெளியானது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி

இதனைத்தொடர்ந்து இன்று மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் ஆன்லைன் வகுப்பை தொடர புதிய ஸ்மார்ட்போன் ஒன்று வழங்கினர். இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத்திற்கு நன்றி" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க பணமில்லை' - கலங்கி நிற்கும் குடும்பம்!

Last Updated :Sep 5, 2020, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.