ETV Bharat / state

'விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன!' - மேற்கு மண்டல ஐ.ஜி.

author img

By

Published : Dec 11, 2019, 4:47 PM IST

நாமக்கல்: மேற்கு மண்டலத்தில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 23 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக காவல் துறை மேற்கு மண்டல தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.

TN west zone IG inspection
TN west zone IG inspection

நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சார்பில் கவாத்து ஆய்வு நிகழ்ச்சி காவல் துறை மேற்கு மண்டல தலைவர் பெரியய்யா தலைமையில் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் வஜ்ரா, வருண் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்தும் பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியய்யா, "கோவை மண்டலத்தில் 46 சோதனைச் சாவடிகள் உள்ளன. எனவே, நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்பில்லை. நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ள கிராமங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். அங்கு வசிக்கும் பொதுமக்களும் காவல் துறையினருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.

மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா ஆய்வு

மேலும், பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நல்லுறவு இருப்பதால், இதுவரை எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. காவலன் எஸ்.ஒ.எஸ். செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்தால் உடனடியாக இந்தச் செயலி மூலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

மேற்கு மண்டல ஐஜி செய்தியாளர் சந்திப்பு

கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 23 விழுக்காடு வரை சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு முழுமுதற்காரணம் பொதுமக்கள் தலைக்கவசம் அணிவதுதான். வரும் ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மேலும் குறையும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் காவலன் எஸ். ஓ. எஸ் செயலி விழிப்புணர்வு!

Intro:காவலன் எஸ் ஒ எஸ் செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் மேற்கு மண்டலத்தில் விபத்துகளில் உயிரிழப்பு கடந்தாண்டு விட இந்தாண்டு 23 சதவீதம் குறைந்துள்ளது - மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா Body:நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் சார்பில் கவாத்து ஆய்வு நிகழ்ச்சி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியம்மா தலைமையில் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயதப்படையினர் சார்பில் சிறப்பு அணிவகுப்புகள்,வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களின் செயல்பாடுகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.



இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா கோவை மண்டலத்தில் 46 சோதனை சாவடிகள் உள்ளதாகவும் நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்பில்லை எனவும் நக்சலைட் ஊடுருவ வாய்ப்பு உள்ள கிராமங்களில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் வெளியாட்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்து வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவு சிறப்பாக இருப்பதால் இதுவரை எவ்வித அசம்பாவிதம் நடக்கவில்லை எனவும் காவலன் எஸ் ஒ எஸ் செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனவும் பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பாதுகாப்பற்ற சூழல் நிலவினால் உடனடியாக செயலி மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கோவை மண்டலத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்தாண்டு 23 சதவீதம் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் நிகழ்வு குறைந்துள்ளதாகவும் அதற்கு முழுமுதற்காரணம் பொதுமக்கள் தலைகவசம் அணிந்து வருவதாகவும் அடுத்தாண்டு விபத்துக்களில் உயிரிழப்பு குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.