ETV Bharat / state

விமான நிலையத்தில் காவலன் எஸ். ஓ. எஸ் செயலி விழிப்புணர்வு!

author img

By

Published : Dec 11, 2019, 2:25 PM IST

Kavalan SOS app awareness program
Kavalan SOS

சென்னை: விமான நிலையத்தில் காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை காவலர்கள் நடத்திவருகின்றனர்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை, இந்த காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மூலம் குறைக்க முடியும் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையினர், பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பெண் பயணிகளுக்கு காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கியும் செயலியின் பயன்பாட்டு குறித்து விளக்கியும் விமான நிலைய காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விமான நிலையத்தில் காவலன் எஸ். ஓ. எஸ் செயலி விழிப்புணர்வு

விமான நிலையத்துக்கு வந்த பெண் பயணிகள் ஆர்வத்துடன் இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெண் பயணி ஜெயந்தி, "தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில் தமிழ்நாடு காவல்துறை காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய பெண் பயணி ஜெயந்தி

எஸ்.ஓ.எஸ் செயலி பெண்களுக்கு பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். பெண்கள் அனைவரும் இந்த செயலியை தங்கள் செல்போனில் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பல்லாவரத்தில் வீடுகளில் புகும் கழிவுநீர் - பொதுமக்கள் சாலை மறியல்!

Intro:சென்னை விமான நிலையத்தில் காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்து விமான காவல்
துறையினர் விழிப்புணர்வு நடைபெற்றுவருகின்றது.
Body:காவலன் எஸ்.ஓ.எஸ் செயலியால்
பெண்கள் பாதுகாக்கப் படுவார்கள் சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி பேட்டி:-

சென்னை விமான நிலையத்தில் காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்து விமான காவல்
துறையினர் விழிப்புணர்வு நடைபெற்றுவருகின்றது.

பெண்களின் பாதுகாப்பிற்காக, காவலன் எஸ்.ஓ.எஸ்.செயலி தமிழக காவல்துறையினர். அறிமுகப்படுத்தி உள்ளார்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, நிலையில் தற்போது இந்த எஸ்.ஓ.எஸ் செயலி மூலம் அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த எஸ்.ஓ.எஸ் செயலியை குறித்து பெண்களுக்கு தெரிவிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையினர் பொது இடங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வரும் பெண் பயணிகளுக்கு எஸ்.ஓ.எஸ் செயலி குறித்து விமான நிலைய காவல்துறையினர் துண்டு
பிரசுரங்கள் வழங்கியும் எஸ்.ஓ.எஸ் செயலி பயன்பாட்டை குறித்தும் எடுத்துரைத்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் விமான நிலையத்துக்கு வரும் பெண் பயணிகள் ஆர்வத்துடன் இந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய விமான நிலைய பெண் பயணி ஜெயந்தி அவர்கள் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தமிழக காவல்துறை எஸ்.ஓ.எஸ் செயலியை அறிமுகப்
படுத்தியுள்ளது.

எஸ்.ஓ.எஸ் செயலி பெண்களுக்கு பயனுள்ளதாகவும்,பாதுகாப்பாக இருக்கும். பெண்கள் அனைவரும் இந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.