ETV Bharat / state

ஸ்ரீ சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

author img

By

Published : Feb 14, 2020, 6:34 PM IST

நாகை: திருவெண்காட்டில் (புதன் ஸ்தலம்) ஸ்ரீ சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை
நாகை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரன்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூன்று குளங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் மக்களுக்கு ஞானம், குழந்தை பாக்கியம் , எம பயம் நீங்கும் போன்ற பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல், இந்த ஆண்டும் இந்திரப் பெருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடள் வெகு விமரிசையாக தொடங்கியது. இந்நிலையில், 9ஆவது நாளான நேற்று திருத்தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.

ரீ சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டம்

இதில் கலந்துகொண்ட சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி வடம் பிடித்திழுத்து திருத்தேர் திருவிழாவை தொடங்கிவைத்தார். இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவெண்காட்டில் குவிந்துள்ளதால் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: காதலர் தினம் : கோவை பெரியார் படிப்பகத்தில் உற்சாக கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.